districts

img

விவசாயத் தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

திருவாரூர், நவ.9 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட விரிவடைந்த மாவட்டக் குழு பேரவை வெள்ளிக்கிழமை மாலை, திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் துணைத் தலைவர் எம்.மணி தலைமை வகித்தார். பேரவையில் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் காலி இடங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆறு.பிரகாஷ், மாவட்டப் பொருளாளராக சரவண.சதீஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பேரவையில் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, மாவட்டப் பொருளாளர் ஆறு.பிரகாஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.