மாஸ்கோ, நவ.9- அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்புடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்ப தாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்த லில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற் றுள்ளார். 2025 ஜனவரியில் அவர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், வெள் ளிக்கிழமையன்று (நவ.8) செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்ற பிறகு 70-க்கும் மேற்பட்ட நாடு களின் தலைவர்கள் தொலைபேசி யில் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசவில்லை. விரைவில் நாங்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவருடன் பேசத் தயாராக இருக்கி றேன்” என்று கூறியிருந்தார். இதனிடையே, ரஷ்ய சிந்த னைக் குழுவான வால்டாயின் வரு டாந்திர கூட்டத்தில் பங்கேற்ற ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் ‘அமெ ரிக்க ஜனாதிபதியாக தேர்வாகி யுள்ள டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் தயாரா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு பதிலளித்த புடின், முதலில் டிரம்பின் வெற் றுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டதுடன், ‘நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பு கிறேன்’ எனவும் ‘டிரம்புடன் பேச்சுவர்த்தை நடத்தத் தயார்’ எனவும் தெரிவித்துள்ளார். ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவும் இதனை விரிவாக எடுத்துரைத்துள்ளார். ‘பதவியேற்புக்கு முன்பா கவே டிரம்ப் புடினைச் சந்திக்க லாம்’ எனவும் ‘ஆனால் இருநாடு களுக்கும் இடையிலான சந் திப்பை ஏற்பாடு செய்யும் பணி கள் எதுவும் இன்னும் துவங்க வில்லை’ என்றும் கூறியுள்ளார். ‘டிரம்ப் உடன் புடின் பேச்சு வார்த்தை நடத்தத் தாயாராக இருந்தாலும் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் சிறப்பு ராணுவ நட வடிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது’ எனவும் ‘அது ரஷ்யாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ரஷ்யா - உக்ரைன் போரை அமைதியான முறையில் தீர்க்கவே புடின் விரும்புகிறார்’, எனவும் தெரிவித்துள்ளார்.