திருச்சிராப்பள்ளி, நவ.9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டக் குழு மூத்த தோழர் எஸ்.ஆர்.பாலன் (90). இவர் உடல் நலக் குறைவால் வெள்ளியன்று காலமானார். 1957 ஆம் ஆண்டு முதல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு உறுப்பினராகவும், பி. ராமச்சந்திரன், கே.வரதராசன் போன்ற மூத்த தோழர்களு டன் இணைந்து கட்சிப் பணியாற்றியவர். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். கே.கே நகரில் உள்ள அவரது இல்லத் தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உட லுக்கு கட்சியின் மாநகர் மாவட்டக் குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அகமது, அபிஷேக புரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி, புற நகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ் மற்றும் செல்வராஜ் வீரமணி உள்ளிட்டோர் தோழர் பாலன் உடலுக்கு மலர் வளையம் வைத்து செவ்வஞ்சலி செலுத்தினர். சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இரங்கல் கூட்டமும், பின்னர் இறுதி நிகழ்ச்சியும் நடை பெற்றது. மறைந்த மூத்த தோழர் எஸ்.ஆர்.பாலன் உடலுக்கு சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மூத்த தோழர் கே.வி.எஸ்.இந்துராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் சம்பத் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.