புதிய கட்டடங்கள் திறப்பு
பாபநாசம், நவ.9 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ரெகு நாதபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில், குழந்தை கள் நேய பள்ளி உட்கட்ட மைப்பு வசதிக்கான சிறப்புத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். ரெகுநாதபுரத்தில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் பாப நாசம் ஊராட்சி ஒன்றியத் தலைவி சுமதி, பள்ளி ஆசிரி யைகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். ரெகுநாதபுரத்தில் ரூ.12.67 லட்சத்தில் கட்டப்பட்ட பொது விநியோக கட்டடத்தையும் துணை முதல்வர் உதயநிதி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். ரெகு நாதபுரத்தில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் சரபோஜி ராஜ புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செய லாட்சியர் சின்னப்பொண்ணு, செயலர் கலியமூர்த்தி, கூட்டு றவு சார் பதிவாளர் கள அலுவ லர் சரவணன், கிராம மக்கள் பங்கேற்றனர்.
வாசிப்போர் மன்றக் கூட்டம்
புதுக்கோட்டை, நவ.9 - புதுக்கோட்டை திருக் கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ் வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களே நடத்திய வாசிப்போர் மன்றக் கூட்டம் சனிக்கிழமை நடை பெற்றது. பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் தலைமை வகித்தார். விழாவில் எழுத் தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறார் கதைகளை மாணவர்கள் சுவையாகக் கூறினர். சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் சோலச்சி சிறப்பு ரையாற்றினார். கவிஞர்கள் சிக்கந்தர், ம.செல்லத்துரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிஞர் காசாவயல் கண்ணன் நிகழ்வினை ஒருங்கிணைத் தார். முன்னதாக மாணவி ஹரிப் பிரியா வரவேற்க, மாணவி சிவானி நன்றி கூறினார். மாணவி மதுஸ்ரீ தொகுத்து வழங்கினார்.
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, நவ. 9- மின்வாரியத்தை 5 கம்பெனிகளாக பிரித்து, அதை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும். வீடு களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரமும் விவசாயிகள் பம்ப் செட் இலவச மின்சாரத்தையும் தொடர்ந்து வழங்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 62,000 காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மின்வாரியமே பொருத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மக்கள் சந்திப்பு தெருமுனை பிரச்சா ரம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் தென் னூர் அரசமரத்தடியில் நடந்த பிரச்சாரத்திற்கு சங்க வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் ஜெய்சங்கர், வட்டச் செயலாளர் பழனி யாண்டி, எஸ்.கே.செல்வராஜ் ஆகியோர் பேசினர். ஜான் பாஸ்கோ ரவி நன்றி கூறினார். பின்னர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப் பட்டது.
சிபிஎம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய கிளை மாநாடுகள்
கும்பகோணம், நவ.9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் தெற்கு ஒன்றிய 24 ஆவது மாநாட்டையொட்டி திருவிடைமரு தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 21 கிளைகளில் மாநாடு நடைபெற்றது. அதில் கீரனூர் ரஞ்சித், பருத்திசேரி வீரமணி, ஆரியச்சேரி மணி வேல், ஆரியச்சேரி பி கிளை நாகையன், செம்மங்குடி அழகர், சேத்திக் குளம் கண்ணன், சேத்திக்குளம் பெண் கிளை செந்தமிழ்ச்செல்வி, திருச்சேறை ஆறுமுகம், ஆண்டாளூர் சிலம்பரசன், மாத்தூர் கண்ணன், கூகூர் முருகன், பெரப்படி முரளி, வேலங்குடி பானுமதி, ஆரியச் சேரி பெண் கிளை மலர்க்கொடி, செருகுடி சத்தியபிரியன், வண்டு வாஞ்சேரி ஜெயராமன், நாச்சியார்கோவில் சுரேஷ், ஏனநல்லூர் மதி மாறன், கீரனூர் பெண் ஜோதி, கருவளர்ச்சேரி ஐயப்பன், கிருஷ்ணா புரம் அன்பழகன், ஆகியோர் கட்சியின் புதிய கிளைச் செயலாளர் களாக தேர்வு செய்யப்பட்டனர். கிளை மாநாடுகளில் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலா ளர் பழனிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ராஜ ராஜசோழனின் சதய விழா தொடங்கியது
தஞ்சாவூர், நவ.9 - தமிழ் பல்கலைக்கழகத்துக்கு ராஜராஜசோழன் பெயரை சூட்ட வேண்டும் என ராஜராஜசோழனின் சதய விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார். மாமன்னன் ராஜராஜசோழனின் 1039 ஆவது ஆண்டு சதய விழா சனிக்கிழமை தஞ்சாவூர் பெரிய கோயிலில் தொடங்கியது. விழா வின் தொடக்கமாக சதய விழாக் குழுத் தலைவர் து.செல்வம் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தொடக்க உரை யாற்றினார். விழாவில் பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன், முன்னாள் நகர்மன்றத் தலை வர் சி.இறைவன், பொதுவுடமை இயக்கத் தலைவர் சி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், நவ.9 - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. பருத்தி மறைமுக ஏலத்தில் பாபநாசம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளான மதகரம், சத்தியமங்கலம், வலங்கைமான், கோபு ராஜபுரம், அய்யம்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து சுமார் 20 விவ சாயிகள் ஒரு மெ.டன் பருத்தியினை விற்பனைக்காக எடுத்து வந்தி ருந்தனர். இதில் கும்பகோணத்தைச் சார்ந்த 2 வணிகர்கள் அதிகபட்சம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.5539, குறைந்தபட்சம் ரூ.4089, சராசரி ரூ. 4340 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் மொத்த மதிப்பு ரூ.35 000. ஏலத்திற்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலை மையும், மேற்பார்வையாளர் சிவானந்த் முன்னிலையும் வகித்தனர். மேலும் எள், உளுந்து, பச்சைப்பயறு, கொப்பரை மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் ஏல முறையில் தரத்திற்கேற்ப நல்ல விலைக்கு விற்பனை செய்து தரப்படுகிறது.
ஆவணத்தான்கோட்டையில் கிராம செயல் அலுவலக கட்டிடம் திறப்பு விழா
அறந்தாங்கி, நவ.9 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ஆவணத்தான்கோட்டை ஊராட்சியில் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கிராம செயல் அலுவலக கட்டிடத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவகுமார் மற்றும் அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆவணத் தான்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி தொகுதியில் ரூ.1.87 கோடியில் பள்ளிக் கட்டிடங்கள் திறப்பு
தஞ்சாவூர், நவ.9 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடம் ரூ.1 கோடியே 27 லட்சத்திலும், செந்தலைவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மூன்று வகுப்பறைக் கட்டடம் ரூ.60 லட்சத்திலும் கட்டப்பட்டு, சென்னையில் இருந்து காணொலி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இரு இடங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.