நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியரிடம் டிஒய்எப்ஐ புகார்
புதுச்சேரி, மே 21 - அரசின் உத்தரவை மீறி வங்கி கணக்கி லிருந்து பணம் பிடிக்கும் தனியார் நிதி நிறு வனத்தன் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக சங்கத்தின் புதுச்சேரி உழ வர்கரைநகர தலைவர் சஞ்சைசேகரன், செய லாளர் வினோத்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அருனை சந்தித்து கொடுத்துள்ள புகாரின் சுருக்கம் வருமாறு: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பொது மக்கள் வாங்கிய கடனுக்கு மாதந்திர தவணை தொகையை பிடித்தம் செய்யக்கூடாது, பணத்தை செலுத்த வற்புறுத்தக்கூடாது என கடந்த மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால், தனியார் நிதி நிறுவனங்கள் அர சின் உத்தரவை மீறி, வழக்கமான முறை யில் மாதாந்திர தவணைத் தொiயை கணக்கி லிருந்து பிடித்தம் செய்கின்றன. தவணையை தொகையை செலுத்த வற்புறுத்தி வரு கின்றன. அத்தகைய நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் 27ம் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், பஜாஜ் பைனான்ஸ் நிறு வனம் மாதாந்திர தொகையினை கட்ட தொடர்ந்து வற்புறுத்துகின்றனர். பணத்தை செலுத்த தவரும்பட்சத்தில் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக அபரா தம் என்று கூறி 600 ரூபாய் வரை எடுத்துக் கொள்கின்றனர். மக்களை கொள்ளை யடிக்கும் இத்தகைய நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.