மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பால் புதிய சாலை
சிதம்பரம், ஜன 7- சிதம்பரம் அருகே பி.முட்லூரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு 5 கி.மீ தூரம் சாலை மிகவும் மோச மாக இருந்தது. இதனை புதிய தார் சாலையாக அமைக்க வேண்டும் என்று பரங்கிப்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அதிகாரிகள் சமாதானம் செய்து வந்தனர். ஆனால் தொடர்ந்து சாலை அமைக்காமல் இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் பரங்கிப்பேட்டை பெரிய மதகு பகுதியில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட
