tamilnadu

img

4 நாட்களில் 5 பத்திரிகையாளர்கள் பலி.... டியுஜே இரங்கல்.....

சென்னை:
கொடிய வைரஸ் தாக்குதலால் கடந்த நான்கு நாட்களில் 5 பத்திரிகையாளர்கள் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் பலியானவர்களின் குடும்பத் திற்கு தமிழக அரசும் முதலமைச்சரும் உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் டியுஜே கோரிக்கை விடுத்துள்ளது.

டியுஜே மாநிலத் தலைவர்  பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள இரங் கல் அறிக்கை வருமாறு:-

தமிழகம் முழுவதும் ஈவு, இரக்கமின்றி மனித உயிர்களை கொத்து, கொத்தாய் பலி வாங்கும் கொரோனாவிற்கு 4 நாட்களில் 5 பத்திரிகை சகோதரர்கள் பலியாகி விட்டார்கள் என்ற தகவலை அறிந்து அதிர்ச்சியுற்றேன்.8 ஆம் தேதி குமரி மாவட் டம் அருமனை தினகரன் நாளிதழ் செய்தியாளர் சகோதரர் டென்சன்(50), மதுரை மாநகர தினகரன் நாளிதழ் மூத்த புகைப்பட கலைஞர், மதுரை செய்தியாளர் டியுஜே முன்னாள் நிர்வாகி நம்பிராஜன் (64) ஆகியோர் வைரஸ் தொற்றால் பலியாகினர்.
அடுத்த நாளே (மே 9) மதுரையில் முன்னாள் தி இந்து, டி.டி. நெக்ஸ்ட் நாளிதழ்களின் செய்தியாளர் சரவணன், விகடன் குழுமத்தில் 30 ஆண்டுகளுக்கும்மேல் பணியாற்றிய தலைமை வடிவமைப்பாளர்  ப.பிரபு (58) ஆகியோரும் கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டு,சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து விட்டனர் என்கிற செய்தி துயரமளிக்கிறது.மே 11 அன்று கோவை மாவட்டம் சூலூர் பகுதி மாலைமலர் செய்தியாளார் மணி (47) கொரோனா தொற்றுக்கு பலியாகிவிட் டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

4 நாட்களில் 5 சகோதரர் கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியான செய்தி அதிர்ச்சியையும் வேதனையயும் அளிக்கிறது.5 சகோதரர்களை இழந்து வாடும் அவர்களது குடும் பத்தாருக்கும், உறவினர் கள், அவர்கள் பணிபுரிந்த நிறுவனம் சார்ந்த அனைவருக்கும் என் சார்பிலும், டியுஜே சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த கொடூர பெருந் தொற்று காலத்தில், தங் களை நம்பியுள்ள குடும் பத்தாரின் நிலைமைகளை மனதில் கொண்டு கொரோனா பாதுகாப்பு விதி 
முறைகளை கறாராக கடைப்பிடித்து விலை மதிப் பற்ற தங்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டுமாய் அன்புடன் கோருகிறேன்.

தங்களின் உயிரை துச்ச மாக எண்ணி, பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த, 24 மணி நேரமும் களப்பணியாற்றும்  பத்திரிகையாளர்களை “முன் களபணியாளர்களாக அங்கீகரித்து அறிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 5 முன்கள பணியாளர்களின் குடும்பத்தார்களுக்கு  போர்க் கால அடிப்படையில் அரசு ஆணைகளை பிறப்பித்து அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிதி உதவி வழங்கி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைக்க அனைத்து பத்திரிகையாளர்களின்  சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.