தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு வெளியாகி உள்ளது. இதில் விழுப்புரம், நெல்லை, திண்டுக்கல், தருமபுரி உள்பட 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் வி.மோகன சந்திரன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கே.தர்பகராஜ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் ஆர்.சுகுமார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமனம்.
தொழில் மற்றும் வர்த்தக துறை கூடுதல் இயக்குநர் கே.சிவசௌந்தரவல்லி திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.சாந்தி தோட்டக்க்கலைத்துறை இயக்குநராக நியமனம்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எம்.என்.பூங்கோதை வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம்.
தமிழ்நாடு பட்டு வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநர் ஜே.இன்னசண்ட் திவ்யா, தொழிற்கல்வித்துறையின் ஆணையராக நியமனம்.
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் ஆட்சியர் லலிதாத்தியா நீலம், நகராட்சி நிர்வாக துறையின் இணை ஆணையராக நியமனம்.
விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞெய் நாராயணன் மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலராக நியமனம்.
திருவாரூர் ஆட்சியர் டி.சாருஸ்ரீ கருவூலங்கள் மற்றும் கணக்குப்பதிவியல் துறையின் இயக்குநராக நியமனம்.
செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர் ஆர்.அனமிகா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் இயக்குநராக நியமனம்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் சிகி தாமஸ் வைத்தியன், பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையராக நியமனம்.
பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறையின் ஆணையராக ஆர்.ஜெயா ஐ.ஏ.எஸ் நியமனம்.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் துறையின் மேலாண் இயக்குநர் வி.தக்ஷிணாமூர்த்தி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண் தயாரிப்பு ஆணையராக நியமனம்.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையர் எஸ்.கணேஷ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சிறப்பு செயலாளராக நியமனம்.
உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறையின் இணை செயலாளர் எஸ்.பி.அம்ரித், கூட்டுறவுத்துறையின் கூடுதல் பதிவாளராக நியமனம்.
பழனி துணை ஆட்சியர் எஸ். கிருஷ்ணன் சிதம்பரம் துணை ஆட்சியராக நியமனம்.
கூடுதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஷங்கர் லால் குமாவத், உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறையின் கூடுதல் செயலாளராக நியமனம்.
வணிகவரித்துறையின் இணை ஆணையர் துர்கா மூர்த்தி ஐஏஎஸ், TANMAG அமைப்பின் நிர்வாக இயக்குநராக நியமனம்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பெருநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலான் இயக்குநராக நியமனம்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கே.பி.கார்த்திகேயன் எல்காட் மேலாண்மை இயக்குநராக நியமனம்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு சாலை திட்ட பணிகள் 2-இன் திட்ட இயக்குநராக நியமனம்.
அரசு பொதுத்துறையின் துணை செயலாளர் ஜெ.இ.பத்மஜா, விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்.
மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலர் சித்ரா விஜயன், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம்.
தருமபுரி கூடுதல் ஆட்சியர் கௌரவ் குமார், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்கள் மற்றும் கழிவுநீர் அகற்றும் துறையின் செயல் அலுவலகராக நியமனம்.
கைத்தறி துறை இயக்குநர் ஏ.சண்முக சுந்தரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக நியமனம்.