புதுதில்லி,ஜனவரி.31- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டுத் தொடர் இன்று தொடங்கியது.
2025ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் இன்று தொடங்கியது.
2025-2026ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்யவுள்ளார். இரு அவைகளின் முதல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி.13 வரை நடைபெறுகிறது. இரண்டாம் அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.