tamilnadu

img

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 225 பேருக்கு கொரோனா.... 

சென்னை
தமிழகத்தின் பெருநகர மண்டலமான சென்னையில் கொரோனா ருத்ரதாண்டவமாடி வருகிறது. தினசரி பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அங்கு தாறுமாறாக இருப்பதால் அம்மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னை மட்டுமின்றி அருகில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும் கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பொழுதிலும் இந்த 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை.   

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 225 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த  பாதிப்பு 4,876 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 113 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,693 ஆக  அதிகரித்துள்ளது. இதே போல சென்னைக்கு வடக்கே உள்ள மாவட்டமான திருவள்ளூரில் இன்று ஒரேநாளில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியின் மொத்த கொரோனா பாதிப்பு 3,411 ஆக உயர்ந்துள்ளது.