ஒன்றிய அரசின் வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து ஆவேச ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் 2 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பு
விழுப்புரம்,பிப்.4- ஒன்றிய அரசின் வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து, தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரம் உள்ளிட்ட மாநிலத்தின் 4 மையங்களில் புதன்கிழமை ( பிப். 4) தர்ணா போராட்டம் மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளைப் பாதிக்கும் சட்டங்களை ஒவ்வொன்றாக ஒன்றிய அரசு நிறைவேற்றி வருகிறது. மின்சார சட்டத் திருத்த மசோதா 2025 முன் மொழியப்பட்டுள்ளது. இது சட்டமாகி அமலுக்கு வந்தால் தமிழகத்தில் 25 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். 11 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு விளக்கு மின் இணைப்பு ரத்து செய்யப்படும். வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம், சிறுகுறு தொழில்களுக்கு மானியத்தில் வழங் கப்படும் மின்சாரமும் ரத்து செய்யப் படும். இதனால் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவா். ஒன்றிய அரசின் புதிய விதைச் சட்டம் வெளிநாடுகளிலிருந்து தடை யற்ற வகையில் விதைகளை இறக்கு மதி செய்ய அனுமதிக்கிறது. இந்திய விவசாயிகளிடமிருந்து விதைப் பாது காப்பை முழுமையாக பறிக்கிறது. எதிர் காலத்தில் இந்திய விவசாயிகள் பெரும் நிறுவனங்களிடமிருந்து விதைக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படு வார்கள். 4 மையங்களில் ஆர்ப்பாட்டம் இதுபோன்ற ஒன்றிய அரசின் வேளாண் விரோத கொள்கைகளைக் கண்டித்து, விழுப்புரம், தஞ்சாவூா், திருப்பூா், மதுரை ஆகிய 4 மையங் களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 2 ஆயிரம் பேர் பங்கேற்பு அதன்படி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற தர்ணா போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரவீந்தி ரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாநில துணை தலைவர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மாநில செயலாளர் பி.துளசிநாரா யணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.வேல்மாறன், மத்திய குழு உறுப்பினர் எஸ்.அனு, மாநில செயலாளர் ஆர்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் பேசினர். போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கள் ஆர்டி.முருகன், ஜி.சம்பத், ஏ.லட்சு மணன், ஆர்.கே.சரவணன், கே.சாமிநா தன், எல்.சி.மணி, என்.சாரங்கன், கே.வாசுதேவன், எஸ்.வேம்புலி, எம்.சந்திரன்,மாவட்ட தலைவர்கள் ஆ.தாண்டவராயன், த.ஏழுமலை, டி.கே.வெங்கடேசன், வ.செல்வம், வி.கதிரேசன், பி.சிவராமன், கே.மாத வன், வி.எழில்ராஜா, ஏ.நாகராஜன், கே.கோவிந்தசாமி, ஜி.ஏழுமலை, என். பழனி உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.