12 ஆம் வகுப்பு தேர்வு திருவண்ணாமலை மாவட்டம் 93.64 சதம் தேர்ச்சி
திருவண்ணாமலை,மே 8- 2024-25 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வியாழனன்று (மே 8) வெளியிடப் பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 261 பள்ளி களைச் சேர்ந்த 26,756 மாணவர்கள் தேர்வு எழுதியதில் மாண வர்கள் 11,576 பேரும், மாணவிகள் 13,479 பேரும், மொத்த மாக 25,055 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், 93.64 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள மாநில அளவில் 22 வது இடத்தை பிடித்துள்ளது. அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் 91.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி தற்கொலை ஆரணி அடுத்த கொசபாளையம் பகுதியைச் சேர்ந்த கட்டு மான தொழிலாளி சுரேஷ் மகள் வினோதினி சுப்பிரமணிய சாஸ்திரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவில் தோல்வி அடைந்ததால் அந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேவையற்ற அச்சம், குழப்பம், பயம் ஏதும் இருந்தாலோ அல்லது அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை ஏதும் தேவைப்பட்டாலோ மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குழந்தைகள் உதவி மையம் 1098, 04175-223030, கட்டணமில்லா தொலைபேசி எண்கள். 104, 14416, 6384746181, மரு.பிரசன்னா தீபா, மாவட்ட மனநல மருத்துவர் 8270995886/ 8248491018, மரு.விஜய ராகவன், மனநல மருத்துவர் 9443109680, மரு.ரம்யா, மன நல மருத்துவர் 9047456014, ராக்வினோசீஸ், மனநல ஆலோசகர் 9444279155, பொஞ்ஜன், மனநல ஆலோசகர் உதவி எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். விவசாய சங்கம் தொடர் முயற்சியில் கால்நடை மருத்துவ கிளை திறப்பு ராணிப்பேட்டை, மே 8 - விவசாய சங்கம் தொடர் முயற்சியில் கால்நடை பரா மரிப்பு துறை சார்பில் வியாழனன்று (மே. 8) ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி தலைமையில் குக்குண்டி பகுதியில் கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறக்கப்பட்டது. ஆற்காடு தாலுகாவில் உள்ள குக்குண்டியைச் சுற்றி உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளைப் பராமரிக்க பகுதி நேர கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக விவசாய சங்கம் தொடர் முயற்சியில் வியாழ னன்று (மே. 8) திட்ட இயக்குநர் வழிகாட்டுதல் படி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஊராட்சி மன்ற தலை வர் நேதாஜி தலைமையில் கால்நடை மருத்துவ கிளை நிலை யம் திறக்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்து வர்கள் மணிகண்டன், ராஜம்மாள், சுமதி, வார்டு உறுப்பி னர்கள் தரணி, வில்வநாதன், வெங்கடேசன், பேபி அம்மாள், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சி. ராதா கிருஷ்ணன், குக்குண்டி கிளை தலைவர் சம்பத், செய லாளர் ஏ. குமார், திருவேங்கடம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்வு எழுதிய 7 சிறைவாசிகள் தேர்ச்சி கடலூர், மே.8- கடலூர் மத்திய சிறையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 7 சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 1000க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு உள்ள கைதிகள் தங்களுக்கு தெரிந்த கைத்தொழில் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். அதே போல கைதிகள் படிப்பதற்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. 6 தண்டனை கைதிகளுடன் ஒரு விசாரணை கைதி உட்பட 7 பேர் பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர். இதில் 7 சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2 வகுப்பு தேர்வு: கள்ளக்குறிச்சி மாவட்டம் 90.96 விழுக்காடு தேர்ச்சி கள்ளக்குறிச்சி, மே 8 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சேர்ந்த 124 பள்ளிகளில் 18,311 மாணவர்கள் தேர்வு எழுதி னர். இவர்களில் 16,655 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ள னர். தேர்ச்சி சதவீதம் 90.96 ஆகும். அரசுப் பள்ளிகளை சேர்ந்த 9,004 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,885 மாண வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 7 அரசுப் பள்ளி களில், 25 தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள தாக முதன்மை கல்வி அலுவலர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை
திருவண்ணாமலை, மே 8- திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்தி மலை காப்புக் காட்டில் வன விலங்குகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு சிறிய அளவிலான தண்ணீர் குட்டைகள் அமைக்கப்பட்டது. ஆனால் கடும் கோடை காலத்தில் அந்த குட்டைகளில் தண்ணீர் நிரப்பா மல் உள்ளதால் வனவிலங்கு கள் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. இது குறித்து கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் புனல் காடு பகுதியைச் சேர்ந்த விவ சாயி செல்வம் என்பவர் வனப்பகுதி யில் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். ஆனாலும் இதுவரை அந்த குட்டைகளில் தண்ணீர் நிரப்ப வில்லை. எனவே வன விலங்கு களை பாதுகாக்க தண்ணீர் நிரப்ப வேண்டும் என விவ சாயி செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே திடீர் தீ
விழுப்புரம், மே 8- விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காலி இடத்தில் குவிந்திருந்த குப்பையில் திடீர் தீ புகை மூட்டம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் திருச்சி மார்க்கம் செல்லும் பேருந்துக்கு நிழற்குடையில் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை(மே 8) திடீரென நிழற்குடை அருகே காலியாக உள்ள பொதுப்பணித்துறை இடத்தில் இருந்து தீ மற்றும் புகை மூட்டம் எழுந்தது, இதனை கண்டு பேருந்துக்கு பயணியர் நிழற்குடை க்குள் காத்தி ருந்த பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பதற்றத்துடன் கூடிய அச்சமடைந்துள்ளனர். தீ மற்றும் புகை மூட்டம் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் பேருந்து நிழற்குடை இருப்பதால் மர்ம நபர்கள் யாராவது புகை பிடித்து தூக்கி எறிந்தால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பொது மக்கள் கருத்து தெரிவித்தனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றம் தணிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
துச்சேரி தனியார் பள்ளிகள் 12 ஆம் வகுப்பு தேர்வில் 98.5 விழுக்காடு தேர்ச்சி
புதுச்சேரி, மே 8- புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனி யார் பள்ளிகளின் பிளஸ் 2 தேர்வில் 98.5 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்முறை புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற்றப்பட்டதால் தனியார் பள்ளி மாண வர்கள் மட்டுமே இத்தேர்வை எழுதினர். புதுச்சேரி, காரைக்காலில் கடந்த ஆண்டு வரை தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வந்தனர். இம்முறை அரசு பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறிவிட்டன. தனியார் பள்ளிகள் மட்டுமே தமிழக அரசு பாடத்திட்டத்தில் தேர்வு எழுதினர். கடந்த மார்ச் 2025 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 3,881 மாணவர்களும் 3,683 மாணவிகளும் ஆக மொத்தம் 7,564 மாணவர்கள் தேர்வு எழுதினர். மே 8 அன்று வெளியான முடிவுகளில், தனியார் பள்ளிகளில் பயின்ற 7,453 மாண வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3,794 மாணவர்களும் 3,659 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 98.5 விழுக்காடு தேர்ச்சி ஆகும். இதில் புதுச்சேரியில் 98.5 விழுக்காடாகவும், காரைக்காலில் 98.1 விழுக்காடாகவும் உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 101 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 63 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இதில் நூறு விழுக்காடு மதிப்பெண்களை 582 பேர் எடுத்துள்ளனர். இதில் கணிப்பொறி அறிவியலில் அதிகள வாக 253 பேரும், கணிப்பொறி பயன்பாட்டில் 122 பேரும், பிரெஞ்சில் 75 பேரும் நூறு விழுக்காடு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.