tamilnadu

பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி

100 விழுக்காடு தேர்ச்சி 

புதுச்சேரி, மே 8-  பிளஸ் 2  பொதுத்தேர்வில்  100 விழுக்காடு தேர்ச்சி பெற்று அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளது. இது குறித்து பள்ளியின் முது நிலை தாளாளர் லூர்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி மாநில அளவில் எங்கள் பள்ளியை சேர்ந்த  783 மாணவர்கள் தேர்வு எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்று 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி வைஷாலி 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் மாணவியாக வந்துள்ளார். அதேபோல் பாலாஜி என்ற மாணவர் 589 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்திலும், திகழ்மதி என்ற மாணவி 586 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு  பள்ளியின் சார்பில் தங்க காசுகள் பரிசுகள் வழங்கப்படும்.  தொடர்ந்து மாநிலத்தில் எங்கள் பள்ளி அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சாதனையும் தொடர்ந்து பெற்று வருகிறது. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.