tamilnadu

img

வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு... சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றம்....

சென்னை:
வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் வெள்ளியன்று நிறைவேற்றப்பட்டது.தமிழக சட்டப் பேரவை வெள்ளியன்று பிற்பகல் 3.45 மணிக்கு அவசர அவசரமாக கூடியது. கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, இம்மாநிலத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் பணியிடங்களையும் அரசின் கீழ் வருகின்ற பணிகளில் பணி நியமனங்கள் அல்லது பதவிகளையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் மாநிலத்திற்குள் சீர்மரபினர் களுக்காக தமிழ்நாடு மாநிலத்திற்குள் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்குள்ளாக ஒதுக்கீடு செய்வதற்கு வகை செய்யும் சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்களின் சமமான வளர்ச்சியை முன்னேற்றுவதற்காகவும் பல்வேறு நலன்களுக்கு சிறந்த வாய்ப்பினை குல சத்திரியர் களுக்கு 10.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடுவழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 7 விழுக்காடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5 விழுக்காடு இரு பிரிவுகளாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிந்துரை செய்துள்ளது. 

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்களின் சமமான வளர்ச்சியை முன்னேற்றுவதற்காகவும் பல்வேறு நலன்களுக்கு சிறந்த வாய்ப்பினை குல சத்திரியர் களுக்கு 10.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடுவழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 7 விழுக்காடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5 விழுக்காடு இரு பிரிவுகளாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிந்துரை செய்துள்ளது.பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் கூறப்பட்ட பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது அதற்கிணங்க இட ஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்றவும் அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.எதிர்க்கட்சிகள் இல்லாமலே இந்த அவசர மசோதா  குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் இந்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்வதற்கு முன்பாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.