tamilnadu

img

தொழிற்படிப்புகளிலும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு: மசோதா நிறைவேற்றம்.....

சென்னை:
தொழிற்படிப்புகளிலும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு  7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வழி வகை செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் வியாழனன்று (ஆக.26) உயர்கல்வித்துறை சார்பில் பல்கலைக் கழகங்கள், அரசுக் கல்லூரி கள் மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.அரசுப் பள்ளி மாணவர்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால், அவர்களின் பள்ளிக் கல்வியை அடைய அதிகமான வசதிகள் மற்றும் பல்வேறு தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கு முன்னுரிமையுடன் நடத்தும் முறையானது மேற்கொண்டு தேவைப்படுகிறது என ஆணையம் தனது கண்டறிதலில் தெரிவித்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது அறிவினை வளப்படுத்துவதற்கும், நியாயமான மற்றும்அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும்கல்வியானது முக்கியமாக இருந்தாலும், அவர்களின் கல்வியை அடைவதில்சிறந்த சூழல் மாறுபட்ட மற்றும் இணக்க
மான சூழ்நிலை வழங்கப்பட்ட, தனியார்பள்ளி மாணவர்களுடன் ஒப்பிடும் போதுதனிப்பட்ட வகுப்பை உருவாக்கும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை உயர் கல்வியில் முன்னுரிமையுடன் நடத்தும் முறைக்காக மாநிலத் தின் அதிக கவனம் தேவைப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களின் சமூகபொருளாதார நிலை, அனுபவித்தல் குறைபாடு மற்றும் கடந்தகால சேர்க்கையை கருத்தில் கொண்டு மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுவிதியினை பாதிக்காமல் அரசுப் பள்ளிமாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதற்காக பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் மற்றும் பிற தொழிற்கல்வி படிப்புகளில் 10 விழுக்காட்டிற்கும் குறையாதஇடங்களை ஒதுக்கீடு செய்யலாமென ஆணையமானது பரிந்துரை செய்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே உண்மையான ஏற்றத் தாழ்வுகள் இருப்பது ஆணையத்தின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. அரசானது ஆணையத்தின் பரிந்துரையை கவனமாக ஆய்வு செய்த பின்பு, பல்கலைக் கழகங்கள் தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், மருத்துவம், சட்டம்மற்றும் பிற தொழிற்கல்வி பட்டப்படிப்பு களுக்கான சேர்க்கையில், மாநில அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் குறித்த சில சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்து, அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கிடையே உண்மையான சமத்துவத்தை கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

ஆணையத்தின் பரிந்துரைகளை கவனமாக கருத்தில் கொண்ட பின்பு,மாநில அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை, தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன் வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.காலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா பிற்பகலில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய நாகைமாலி, விஜயதாரணி, ஜி.கே.மணி. நைனார் நாகேந்திரன், டி. ராமச்சந்திரன், சதன்திருமலை குமார்,உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் ஒருமனதாக வரவேற்றனர். அந்த மசோதா தாக்கல் செய்தபோதே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி வரவேற்றதால் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.