செங்கல்பட்டு, மார்ச் 12- தென்மாவட்டங்களிலிருந்து சென் னைக்கு வந்துசெல்லும் பேருந்துகள் இரு மார்க்கத்திலும் செங்கல்பட்டு புறவழிச் சாலை பாலத்திற்குகீழ்வந்துசெல்ல வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தர விட்டுள்ளது. செங்கல்பட்டு நகரம் சென்னைக்கு மிக அருகாமையிலும், மிக வேகமாக வளர்ந்துவரும் நகரமாகவும் தற்போது புதிய தாகத் துவங்கப்பட்டுள்ள செங்கல் பட்டு மாவட்டத்தின் தலைநகராகவும் செயல் படுகின்றது. இந்நிலையில் சென்னையி லிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து செங்கல் பட்டு நகரை புறக்கணித்து வந்ததால் செங் கல்பட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.மேலும் நகரத்திலிருந்து 5கி.மீ தொலைவில் உள்ள பரனூர் சுங்கச்சாவடிக்குச் சென்று ஆபத்தான நிலையில் அங்கிருந்து பேருந்து களைப் பிடிக்கவேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் தென் மாவட்டங்க ளுக்குச் செல்லும் பேருந்துகள் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலத் திற்குக் கீழ் வந்து செல்லவும், அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் மற்றும் நேரக்காப்பகம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம், கோவை, திருநெல்வேலி, மதுரை, கும்பகோ ணம், ஆகிய கழகத்திற்கு கீழ் இயக்கப்படும் பேருந்துகளும் மற்றும் அரசு விரைவு போக் குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலத் தின் கீழ் உள்ள சர்வீஸ் சாலை வழியாகச் சென்று விபத்தினை தவிர்க்கும் வகையில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒருவார காலமாக செங்கல் பட்டு புறவழிச்சாலையில் பயணச்சீட்டு பரி சோதகர்களை வைத்து பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு பகுதி மக்களி டம் கேட்டபோது நீண்ட காலமாகத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின் றோம் தற்போது பேருந்துகள் பாலத்திற்குக் கீழ் வந்து செல்கின்றன. இருந்த போதிலும் பல பேருந்துகள் பாலத்திற்கு கீழ் வருவ தில்லை. அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் வகையில் இருபுறங்களிலும் நேரக் காப்பாளர் அறை அமைத்து நடத்துநர்களைக் கையொப்பம் இட்டுச்செல்ல நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதிச் செயளாளர் கே.வேல னிடம் கேட்டபோது செங்கல்பட்டு புற வழிச்சாலையில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வருகின்றோம். தற்போது பேருந்து கள் நின்று செல்ல போக்குவரத்துத் துறை உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கத்து. புறவழிச்சாலை பாலத்திற்குக் கீழ் இருண்டு பக்கத்திலும் பேருந்துகள் தடையில்லாமல் வந்து செல்லும் வகையில் சாலையை அகலப்படுத்திடுவதுடன் நேரக்காப்பாளர் அறை அமைத்திட வேண்டும் மேலும் போக்கு வரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்கு வரத்து காவலர்களையும் நியமித்திட வேண்டும் என்றார்.