செங்கல்பட்டு, மார்ச் 10- வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து, நிலு வையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவ சாயத் தொழிலாளர்கள் சங்க த்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், திருப் போரூர் செங்கல்பட்டு வட்டத் திற்குட்பட்ட கிராமங்களில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தலித் மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தின ருக்கும் குடிமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அரசின் நலத் திட்டங்களான தொகுப்பு வீடுகள், மின் இணைப்பு, இலவச கழிப்பறைகள் உள்ளிட்டவை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு அரசாணை 318ன் படி உடனடி யாக பட்டா வழங்கிட வலியு றுத்தி செங்கல்பட்டு கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மீது உரிய நட வடிக்கை இது வரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நிலுவை யில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிமனை பட்டா வழங்கிட வலியுறுத்தி அகில இந்தி விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (மார்ச் 10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.கோவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் பி.சண்முகம், நிர்வாகி கள் வி.சசிகுமார், கே.சுப்பிர மணி, பொன்னப்பன், ரகுபிர காஷ்,உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக அம்பேத்கர் சிலை அருகிலிருந்து பேரணி யாக வந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.