tamilnadu

img

கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசம் நிவாரணம் கேட்டு விவசாயி மனு

செங்கல்பட்டு, ஜன.21- செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் இரும்புலிச்சேரி ஊராட்சி யில் அட்டவட்டம் கிராமத் தைச் சேர்ந்தவர் நாகராஜ் (61). இவர், அதேப்பகுதியில் தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில், பாண்டூர் கூட்டுறவு வங்கியில் ரூ.1.1 லட்சம் கடன் பெற்று கரும்பு பயிரிட்டிருந்தார். இந்நிலையில், கரும்பு கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த  17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாட்டத் துக்காக விவசாயி நாகராஜ் குடும்பத்தினருடன் திருக்கழுக்குன்றம் பகுதிக்கு சென்றிருந்ததாக கூறப்படு கிறது. அப்போது, கரும்பு பயிர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்து கிரா மத்தினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், 1.5 ஏக்கர் நிலத்தில் இருந்த கரும்புகள் தீயில் கருகி நாசமாகின. இதுதொடர்பாக, விவ சாயி நாகராஜ் திருக்கழுக்கு ன்றம் காவல்நிலையத்தி லும், வி.ஏ.ஓ.விடம் புகார் அளித்துள்ளார். மேலும், விவசாயக்கடன் அளித்த கூட்டுறவு வங்கிக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.ஆனால், வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் சேதமடைந்த பயிர்களை பார்வையிட வரவில்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில், நிவாரண உதவிக்கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்துள்ளார். ஆனால், இதுவரை எவ்வித மான நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதுகுறித்து, விவசாயி நாகராஜ், ‘தீ விபத்துக் கெல்லாம் காப்பீட்டில் இழப்பீடு கோர முடியாது. மழை போன்ற இயற்கை இடர்பாடுக்கு மட்டுமே இழப்பீடு கோர முடியும் என தெரிவித்துவிட்டனர். கரும்புகளை பதிவு செய்த படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டேன். அவர்க ளும், தீயில் சேதமடைந்த அனைத்து கரும்புகளையும் ஆலைக்கு அனுப்புங்கள், அவற்றுக்கும் நிர்வாகம் அளிக்கும் தொகையை மட்டுமே நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்து விட்டனர். அத னால், பயிர் காப்பீட்டுத் திட்டம் அல்லது நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும். நிவாரணம் கிடைக்க வில்லை என்றால் வங்கியில் பெற்றகடனுக்கும், கரும்பு களை வளர்ப்பதற்கு செல விட்ட தொகைக்காக நிலத்தை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ என வேதனையுடன் கூறுகிறார். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் அசோகன் கூறுகையில், ‘இரும்புலிச்சேரியில் தீயில் எரிந்து சேதமடைந்த கரும்புகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நிவாரண உதவிகள் பெற முடியுமா என சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.