tamilnadu

img

ஃபிரண்ட்ஸ் ஆப்  போலீஸ் தடைசெய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் மனு

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் போலிஸ் நண்பர்கள் குழுவை (ஃபிரண்ட்ஸ் ஆப்  போலீஸ்) தடைசெய்ய வலியுறுத்தி திங்களன்று (ஜூலை 6) தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கும் இயக்கத்தை  இந்திய 
ஜனநாயக  வாலிபர் சங்கத்தினர் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மபா.நந்தன், செயலாளர் க.புருஷோத்தமன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.