districts

img

திண்டிவனம் - நகரி ரயில் பாதை திட்டம் ஆட்சியர்களிடம் மனு கொடுக்கும் இயக்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

ராணிப்பேட்டை, மார்ச் 7- திண்டிவனம்-நகரி ரயில் பாதை திட்டத்தால் பாதிக்கும் அனைத்து  விவ சாயிகளுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி நான்கு மாவட்ட ஆட்சியர்களிடம் மார்ச் 29 அன்று மனுகொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. திண்டிவனம் - நகரி ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் இழக்கும் விவ சாயிகளின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய் (மார் 7) அன்று மாநில செய லாளர் பி. துளசி நாராயணன் தலைமையில் ராணிப்பேட்டையில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டி வனத்திலிருந்து திருவள்ளூர் மாவட்ட எல்லை நகரி வரை புதிதாக அமைக்கப்பட இருக்கும் ரயில் வழித்தடத்திற்கு நிலம் கையகப்படுத்துவதால் விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திரு வள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படக்கூடிய அனைத்து விவ சாயிகளுக்கும் அனைத்து விதமான இழப்புகளுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் எல். சி. மணி வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் பெ. சண்முகம், மாநில பொதுச் செய லாளர். சாமி. நடராஜன் ஆகியோர் பேசுகையில்,“ திண்டிவனம்-நகரி ரயில் பாதை திட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்க்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்”என்றனர். விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிலங்களுக்கு, பயிர்களுக்கு உரிய அதிகபட்ச இழப்பீடு தரக்கூடிய அதி காரம் மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது. இதை வலியுறுத்தி இம் மாதம் 29 ஆம் தேதி நான்கு ஆட்சியர்களிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்படும் என்றும் கூறினார்கள்.