மாமல்லபுரம், பிப்.4- மாமல்லபுரம் கருகாத்தம்மன் கோவில் அருகே கிழக்கு கடற்கரை சாலை இணைப் புடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டுவ தற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தி பேருந்து நிலையம் கட்டுவ தற்கான பணிகளை விரைவில் முடிக்க உத்தர விட்டார். இதைத் தொடர்ந்து திங்களன்று முதல் கட்ட ஆய்வுப் பணி தொடங்கியது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்லும் ஒருவழிப் பாதை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மற்ற பயணிகளால் இடையூறு இல்லாமல் இருக்க குளிர்சாதன ஓய்வு அறை, கேமரா கண்காணிப்புடன் கூடிய லக்கேஜ் அறை, வை-பை இணையதள வசதிகள், வெளிநாட்டு கழிப்பறைகள் போன்ற வசதிகள் இடம்பெற உள்ளன. மேலும் சிற்பக்கலை ஆர்ச்சுகள், புராதன சின்னம் பகுதிகளின் வரைபட கல்வெட்டுக்கள், பேருந்து நிலையம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்க நவீன சுழல் கேமராக்கள் வசதியுடன் கட்டுப்பாட்டு அறை, மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற சுற்றுலா வழி காட்டிகள் மட்டும் அமர்ந்திருக்க வழிகாட்டி கள் அறை இது போன்ற சகல வசதிகள் அமைய உள்ளது.