districts

img

ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய பேருந்து நிலையம் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கடலூர், டிச. 5- கடலூர் ஆட்சியர் அலுவல கம் அருகே புதிய பேருந்து நிலை யத்தை அமைக்க வேண்டும் என்று குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த கூட்டமைப்பின் பொதுக் குழு கூட்டம் தலைவர் வெங்கடே சன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் எம்.மருத வாணன் உரையாற்றினார். நிர்வாகிகள் இளங்கோவன், பிரபாகர், பச்சையப்பன், கண்ணன், முனுசாமி, தேவநா தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  தமிழக அரசு அறிவித்துள்ள மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு என்ற திட்டத்தை மக்கள் நலன் கருதி ரத்து செய்ய  வேண்டும், கடலூரில் புதிய பேருந்து நிலையத்தை ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்தை சீரமைக்க மாற்று புறவழிச் சாலை  பணிகளை துரிதப்படுத்த வேண்டும், செம்மண்டலம், சாவடி, முதுநகர் மணிக்கூண்டு ஆகியவற்றில் ரவுண்டானா அமைக்க வேண்டும். போக்கு வரத்தை சீரமைக்க கம்பியம் பேட்டையில் ரயில்வே பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.