கோவை, ஜூலை 22– பட்டாசு உரிமத்தை முப்பது நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டும் என பட்டாசு வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கோவை மாவட்ட பட்டாசு வணிகர் கூட்டமைப்பின் மாநாடு ஞாயிறன்று கோவை ஆர்எஸ்புரம் அன்னபூர்ணா கலை அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கூட்டமைப்பின் தலைவர் சி.கதிரேஷ் தலைமை தாங்கி னார். மாநாட்டை துவக்கி வைத்து கோவை மாவட்ட தீய ணைப்பு அலுவலர் எம்.பாலசுப்பிரமணியன் உரையாற்றி னார். மாநாட்டில் பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிப் பதற்கான காலத்தை ஆகஸ்ட் மாதம் இறுதிவரை என்று நீட்டிக்க வேண்டும். பட்டாசு உரிமங்களை தீபாவளிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக வழங்கவேண்டும். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கடை நடத்தி வருபவருக்கு நிரந்தர உரிமம் வழங்க வேண்டும். பட்டாசு வகைகளுக்கு வெடிபொருள் பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். உரிம மின்றி பட்டாசு பரிசு பெட்டிகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.