தருமபுரி, அக்.6- அரூரில் பழுதடைந்த பழைய பேருந்து நிலை யத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் பேரூராட்சியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலையம் கட் டப்பட்டது. இப்பேருந்து நிலையத்திற்கு 200க்கு மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. அரூரில் இருந்து சென்னை, சேலம், வேலூர், கோவை, திருவண்ணா மலை, பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், கிராமப் பகுதிகளுக்கும் இங்கிருந்து பேருந்துகள் சென்று வருகிறது. இப் பேருந்து நிலையத்தில் சுமார் 75க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இக் கடைகள் பழுதடைந்து ,பேருந்து நிலைய நிழற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பேருந்து நிலைய கழிப்பறைகள், சிறுநீர்க்கழிப்பிடம் விரிசல் விட்டு பழுதடைந்துள்ளது. மேலும் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. பேருந்துநிலையம் தாழ்வான பகுதியில் இருப்பதால் சிறு மழை பெய்தால் கூட மழைநீர் வெளியில் செல்ல வழியில்லாமல் சிறிது நேரத்தில் பேருந்து நிலையம் குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். எனவே, தற்போது உள்ள பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு நவீன முறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது அரூர் நகரமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.