செங்கல்பட்டு, ஜூன் 8 - வேடந்தாங்கல் பறவைகள் சர ணாலயத்தின் சுற்று வட்ட பரப்பள வைச் சுருக்கத் திட்டமிட்டிருக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ட னம் தெரிவித்துள்ளது. இந்நடவ டிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், மது ராந்தகம் வட்டத்திற்குட்பட்ட வேடந் தாங்கல் கிராமத்தில் 30 ஹெக்டர் பரப்பளவில் வேடந்தாங்கல் பற வைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அக்காலத் தில் வேடர்களின் கிராமம் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமத்தின் ஏரி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, ஓய்வு எடுப்பதற்கும் தங்குவ தற்கும், இனப்பெருக்கம் செய்வ தற்கும் உள்நாடு மட்டுமல்ல பல்லாயி ரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஐரோப்பியக் கண்டங்க ளில் இருந்தும் பறவைகள் வரத் துவங்கின. இந்த ஏரியின் பல்லுயிரியல் முக்கி யத்துவத்தை உணர்ந்த ஆங்கி லேயே அரசு, 1978ம் ஆண்டு அந்தக் கிராமத்தை பறவைகள் சரணாலய மாக மாற்றியது. சரணாலயத்தைச் சுற்றி இருக்கும் கிராமவாசிகள் பறவையின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டு, அங்கு வரும் பற வைகளுக்கு எந்த குந்தகமும் ஏற்படா மல் பாதுகாத்து வருகின்றனர். பற வைகளின் வாழ்வு சமநிலையை சீர்குலைக்கும் எந்தவித நடவ டிக்கைகளுக்கும் கிராம மக்கள் இடம் கொடுப்பதில்லை. வெளி நாட்டுப் பறவைகள் வேட்டையாடப்ப டுவதை முற்றிலும் தடுப்பதோடு, தீபா வளி போன்ற பண்டிகை காலங்களில் கூட பட்டாசு வெடிச்சத்தம் எங்கும் எழுப்பக் கூடாது என்பதைக் கட்டாய முடிவாக்கி கடைபிடித்து வருகின்றனர்.
1972ஆம் ஆண்டு வன ஜீவராசி கள் பாதுகாப்பு சட்டத்தைப் பின்பற்றி 1988 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி ‘வேடந்தாங்கல் ஏரி பற வைகள் சரணாலயம்’ ஆக அறி விக்கப்பட்டது. வேடந்தாங்கல் ஏரியில் நத்தை குத்தி நாரை, கூழைக்கடா, சாம்பல் நாரை, பாம்புத் தாரா, வெட்டி வாயான், கரடி வாயானன், வெள்ளை நிற அரிவாள் மூக்கன், பழுப்பு நிற அரி வாள் மூக்கன், கருப்பு நிற அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, கிளுவை, ஊசிவால் வாத்து, நீல சிறகி, தட்டை வாயன், பச்சைக்கான, பவளக்காலி, பட்டாணி உள்ளான், உண்ணிக் கொக்கு, சிறிய வெள்ளை கொக்கு, நீர்க்காகம், முக்குளிப்பான், மடையான், குருட்டுக் கொக்கு, மீன்கொத்தி, புள்ளி ஆந்தை, மண்குத்தி என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை கள் ஆண்டுதோறும் வேடந்தாங்கல் ஏரியில் உள்ள நீர் கடப்பை மரங்க ளில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வருகிறது.
ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவ மழை யால் ஏரிகள் நிரம்பியிருக்கும் காலத்தில் வரத் துவங்கும் பறவை கள், ஆறுமாத காலம் இந்த ஏரியில் தங்கி இனப்பெருக்கத்தில் ஈடு படும். இந்த காலங்களில் வெளிநாடு களிலிருந்து மட்டுமல்லாமல் உள் நாட்டிலிருந்தும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்து பறவைகளை பார்வையிட்டுச் களித்துச் செல்வர். உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, கனடா, சைபீரிய, ஈரான், ஈராக், பர்மா, வங்கதேசம், இலங்கை என பல்வேறு நாட்டுப் பற வைகளின் புகலிடமான வேடந்தாங் கல் சரணாலயம் உள்ளது. இந்த சர ணாலயம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என்பதால், ஏரியைச் சுற்றளவு சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு (ஏரியில் வீவ்) எவ்வித ஆலைகளும் தொடங்கக் கூடாது என்பது அரசு உத்தரவாகும். கிராமவாசிகள் வீடு கள் கட்ட கூட அனுமதி பெற வேண்டும்.
வேடந்தாங்கல் ஏரியை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரம் பாதுகாக்கப் பட்ட பகுதியாக 2012ம் ஆண்டு வனத்துறை மூலம் அறிவித்தது. மேலும், சுற்றுச் சூழலைக் கெடுக்கும் வகையில் மாசுபடுத்தும் தொழிற்சாலையோ, மின் கோபு ரங்களோ, அடுக்குமாடிக் குடியிருப்பு களோ கட்டவும், வீட்டுமனை பிரிவு களும் அமைக்கவும் கூடாது என வரையறுத்தது. இதன் மூலம் அப் பகுதியில் விளை நிலங்கள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டது. இதனை மக்கள் கடைப்பிடித்து வரும் நிலையில், சரணாலயத்தைச் சுற்றியுள்ள நிலத்தை தொழிற் சாலைக்கு ஒதுக்க மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ் சாலை கருங்குழியில் இருந்து உத்திர மேரூர் செல்லும் சாலை சாத்தமை கிராமத்தில் மருந்து தாயரிக்கும் சன் பார்மாச்சுட்டிக்கல்ஸ் நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனத்தி லிருந்து வெளியேறும் கழிவுகளால் சாத்தைமை ஏரி பாதிக்கப்பட்டுள் ளது. மேலும், மாவட்டத்தின் முக்கிய ஏரிகளில் ஒன்றாகவும், வேடந் தாங்கல் பறவைகள் சரணாலய பற வைகள் இரைதேடும் மதுராந்தகம் ஏரியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சாத்தமை கிராமத்திற்கு அருகில் உள்ள மேல்மா, புதுப்பட்டு, பிளாஞ்சிமேடு ஏரிகளின் சாயல் கருப்பு நிறமாக மாறியுள்ளது. சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வேண்டிய சூழலில், மேலும்மேலும் சுற்றுச்சூழலைக் கெடுப்பதற்கான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. சரணாலயத்தின் பாதுகாக்கப் பட்ட பகுதியாக உள்ள இடத்தில் 40 விழுக்காடு பரப்பை தொழிற்சாலை அமைக்க வழங்க மாநில அரசு முன்வந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
வேடந்தாங்கல் பறவைகள் வாழிட பகுதியை மீண்டும் வரைவதற்கான திட்டத்தை வன விலங்குகளுக்கான மாநில வாரியம் அனுமதி அளித்து, தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. பரப்பளவை குறைப்பதால் பல்வகை உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனத் தலைமை வனக்காவலரை கட்டாயப்படுத்தி அறிக்கை பெற்றிருப்பதாகவும், அதைச் சுற்றுச்சூழல் துறை செயலாளரும் பரிந்துரைத்து இருப்பதாகவும் தெரிகிறது. இதன் பின்னணியில் தனியார் நிறுவனமான சன் பார்மாச்சுட்டிக்கல்ஸ் மருந்து தொழிற்சாலையின் கைவரிசை இருப்பதாக தெரிகிறது. இயற்கை சமநிலை மாற்றத்தால் பருவ மழை உள்ளிட்ட கால சூழ்நிலை மாறிவருவதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குப் பறவைகள் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சரணாலயத்தின் சுற்றுவட்டார பகுதிகளைச் சுருக்குவது இயற்கைக்கு மாறான ஒன்றாகும். எனவே, மத்திய அரசும், மாநில அரசும் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுளளது.