மதுராந்தகம், ஜன. 9- விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத தால் மதுராந்தகம் அரசு போக்குவரத்து பணி மனை நீதிமன்ற பணியாளர்களால் ஜப்தி செய்யப்பட்டது. செங்கல்பட்டு சக்தி நகரைச் சார்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சாலை விபத்தில் அரசுப் பேருந்து மேதி சம்பவ இடத்திலேயே பலியானர். இந்த விபத்து குறித்த வழக்கு மதுராந்தகம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விபத்தில் பலியான ரமேஷ் குடும்பத்திற்கு மதுராந்தகம் நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 29 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தொகை அதிகப்படியாக இருப்ப தாகக் கோரி போக்குவரத்து பணிமனை நிர்வாகத்தின் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் மதுராந்தகம் நீதிமன்றம் அறிவித்த தொகை குறைவாக உள்ளது எனக் கூறி, கடந்த 2018ஆம் ஆண்டு ரூபாய் 62.50 லட்சம் இழப்பீடு பணம் மற்றும் அதற்கான வட்டித் தொகையை வழங்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் நீதிமன்றத்தில் அறிவித்த இழப்பீட்டுத் தொகையை மட்டும் வழங்கிய பணிமனை நிர்வாகம் உயர்நீதிமன்றம் அறி வித்த இழப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்து வந்தது. இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதன் பேரில் உயர்நீதிமன்றம் அறி வித்த இழப்பீட்டுத் தொகையை வழங்காத மதுராந்தகம் பணிமனை மற்றும் விபத்துக்குக் காரணமான பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி சரிதா கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உத்தரவு வழங்கினார். அதன் பேரில் நீதிமன்ற ஊழியர்கள் மதுராந்தகம் அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் ஒரு அரசு பேருந்தை வியாழனன்று (ஜன. 9) ஜப்தி செய்தனர்.