தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 ,25 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, வங்க கடலில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி அடுத்த 3 நாட்களில் தமிழகம் நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் கடலோர மாவட்டங்களில் 24 , 25 ஆம் தேதிகளில் மிகுந்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.