சென்னை:
வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட் டங்கள் என சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்கல் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய் யக்கூடும். சென்னை மற்றும் புறநகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.