புதுதில்லி:
இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக, முதலீட்டாளர்கள், கடந்த செப்டம்பர் 16, 17 ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ. 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளனர்.கடந்த திங்கட்கிழமையன்று 262 புள்ளிகள் சரிவைக் கண்ட மும்பை பங்குச்சந்தை, செவ்வாய்க்கிழமையன்று 642 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. இதன்காரணமாக பி.எஸ்.இ.யில் (Bombay Stock Exchange) பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மதிப்பு, தற்போது 2 லட்சத்து 72 ஆயிரத்து 593
கோடியே 54 லட்சம் ரூபாய்குறைந்து, 1 கோடியே 39 லட்சத்து 70 ஆயிரத்து 356 கோடியே 22 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கச்சா எண்ணெய் விலைஒரே நாளில் 20 சதவிகிதம் ஏற்றம் கண்டது; மறுபுறத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது ஆகியவை காரணமாக, அதிகளவிலான முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து வெளியேறியதாலேயே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்நிய முதலீட்டாளர்களின் கவனம் அமெரிக்க டாலரின் பக்கம் திரும்பி இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.