tamilnadu

img

முட்டை விலை 50 காசு உயர்வு

சென்னை, மார்ச் 25- நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 50 காசு உயர்ந்து ரூ.3.25 க்‌கு விற்பனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி யாக பரவிய வதந்தியால் நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணை உற்பத்தியில் பெருத்த தேக்கம் ஏற்பட்டது. கறிக் கோழி,  முட்டையும் லட்சக் கணக்கில் விற்பனை யாகாமல் தேங்கியது. இதனால் கடந்த சில நாட்களாக கறிக்கோழி விலையும் முட்டை விலையும் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இதனை அடுத்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் முதலமைச்சரையும் அரசு அதிகாரிகளையும் நேரில் சந்தித்து முறையிட்டனர்.

தமிழக சட்டப்பேரவையிலும் இந்த பிரச்  சனை எதிரொலித்தது. அப்போது இதற்கு  விளக்கம் அளித்த சுகாதாரத் துறை அமைச்  சரும் கால்நடைத்துறை அமைச்சரும் கோழி கறி முட்டை சாப்பிடுவதால் கொரோனா  வைரஸ் தாக்கம் ஏற்படாது என்று பொது மக்களின் அச்சத்தைப் போக்கினார். அதனைத்தொடர்ந்து கறி கோழி விற்பனையும் முட்டை விற்பனையும் மீண்டும் துவங்கியது. முட்டை கொள்முதல்  விலை கடந்த 3 நாட்களில் ரூ.1.30 வரை உயர்ந்துள்ளது.