நாக்பூர்:
நாட்டின் பொருளாதாரம் நல்லமுறையிலேயே இருப்பதாகவும், ஆனால், அதனை அளவிடும் ஜிடிபி முறைதான் தவறாக உள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அண்மையில், நாக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் இதுபற்றி பகவத் மேலும் பேசியிருப்பதாவது:நாட்டின் பொருளாதாரம் தற்போது கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், நாடுவளர்ந்து கொண்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது.
உலகப் பொருளாதாரமே தற்போது கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருவதால் அதன் தாக்கம்தான் நமது பொருளாதாரத்திலும் தென்படுகிறது. இதனை வீழ்ச்சி என்று சொல்ல முடியாது. வளர்ச்சி வேகம் மந்தமாக உள்ளது என்றுவேண்டுமானால் கூறலாம்.பொருளாதார நிபுணர்கள் பலர் ஜிடிபி எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தியைச் சுட்டிக்காட்டி, பொருளாதார வளர்ச்சி குறைவு என்று கூறுகின்றனர். உண்மையில் ஜிடிபிஎன்பது பொருளாதார வளர்ச்சியைத் தவறாகக் கணக்கிடும் ஒரு அளவுகோல் ஆகும். இவ்வாறு மோகன் பகவத் கூறியுள்ளார்.