பாட்னா,
பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
பீகார் மற்றும் ஜார்க்கண்டில் தொடர்ந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. இந்த நிலையில், பீகாரில் இடி, மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்து உள்ளனர் என பீகார் பேரிடர் மேலாண் துறை தெரிவித்து உள்ளது.
இதேபோல் ஜார்க்கண்டில் 12 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வடைந்து உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.