tamilnadu

img

பீகாரிலும் ஊரடங்கு நீட்டிப்பு... வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதியில்லை...  

பாட்னா
பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 269 பேர் பலியாகியுள்ள நிலையில், 50% க்கும் மேற்பட்டோர் (14 ஆயிரம்)  குணமடைந்துள்ளனர்.  
இந்நிலையில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் எனவும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவித பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்ட்டது. ஆனால் மத வழிபாட்டு தலங்கள் திறக்க தடை தொடர்ந்து நீடிக்கும் என பீகார் அரசு அறிவித்துள்ளது. 

பீகார் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அம்மாநில அரசு கூறினாலும், பாஜக - நிதிஷ் கூட்டணி அரசு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பற்றிய வேளைகளில் தான் அதிகம் கவனம் செலுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.