பழனி:
பழனி, பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, கீரனூரில்ஆதார் மையம் அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பழனி நகர் செயலாளர் கந்தசாமி புதனன்று விடுத்துள்ள அறிக்கை:-
ஆதார் அட்டை பல்வேறு பணிகளுக்கு தேவைப்படுகிறது. குறிப்பாக நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆதார்அட்டையில் செல் நம்பர் இணைக் கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் வங்கியில் சாலையோர வியாபாரிகள் மத்திய அரசுதிட்டத்தின் கீழ் ரூ 10,000 பெறுவதற்கு ஆதார் அட்டையில் செல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவர்களுக்கும் ஆதார் அட்டை திருத்தங்கள் தேவைப்படுகிறது. பழனியில் வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் ஆதார் எடுக்கப்பட்டு வந் தது. கொரோனா பாதிப்பால் இரண்டு மையங்களும் மூடப்பட்டுள்ளது இதனால் பழனி வட்டம்முழுவதும் பொதுமக்களும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள் ளனர்.எனவே, பழனி நகரில் இரண்டுஇடங்கள், வங்கிகளிலும் புதிதாகஆதார் மையங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறமக்கள் பயன்பெறும் வகையில் பேரூராட்சி மையங்களில் ஆதார் மையங்கள் அமைக்க வேண்டும். குறிப்பாக பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, கீரனூரில் ஆதார் மையம்அமைக்க வேண்டும். இதன் மூலம்மக்கள் பழனி நகருக்கு வருவதுகுறையும்.
சுய உதவிக் குழுக்களில் கடன்பெற்றவர்களுக்கு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வட் டிக்கு வட்டி என்ற கட்ட வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றன. கட்டமுடியாத பெண்கள் தற்கொலைக்கு செல்லும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், சுய உதவிக் குழுவில் கடன் பெற்றவர்கள் பணத்தை திரும்ப செலுத்த கூடுதலாக ஆறு மாத கால அவகாசம்வழங்க வேண்டும். வட்டிக்கு வட்டிவாங்குவதை நிறுத்த வேண்டும். மத்திய அரசு சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம்ரூ. 10,000 கடன் வழங்க உத்தரவிட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். சில வங்கிகளை சாலையோர வியாபாரிகள் அணுகி கேட்டதற்கு தங்களுக்கு பணம் வரவில்லை, வழங்கமுடியாது என்று கூறியிருக்கின்றனர். இது சாலையோர வியாபாரிகளை ஏமாற்றுவதாகும். மாவட்டஆட்சியர் தலையிட்டு விண்ணப் பித்த செய்த அனைவருக்கும் ரூ10,000 கடன் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.