tamilnadu

img

கொரோனா அறிக்கையில் ஏற்றத்தாழ்வு.... பீகார், உத்தரப்பிரதேசம் மிக மோசம்

புதுதில்லி:
இந்தியாவின் கொரோனா அறிக்கையில் ஏற்றத்தாழ்வு உள்ளது. இதில் பீகார், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் மிக மோசம் என ப்ரீ பிரிண்ட் களஞ்சியமான ‘மெட்ராக்ஸிவ்’, அமெரிக்கஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் திங்களன்று மொத்தம்  14 லட்சத்து 35 ஆயிரத்து 453 பேருக்கு கொரோனா  தொற்றுபாதித்துள்ளது. 3 லட்சத்து 75 ஆயிரத்து 799 பேருக்கு பாதிப்பை கொண்டுள்ள  மகாராஷ்டிரம், முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் (2,13,723) தொடர்கிறது. மூன்றாம் இடத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 606 பேருக்கு தொற்று பாதிப்புகண்டறியப்பட்டு தில்லி நீடிக்கிறது.நான்காம் இடத்தில்ஆந்திரா (96 ஆயிரத்து 298), தொடர்ந்து கர்நாடகம்(96ஆயிரத்து 141), உத்தரப்பிரதேசம் (66 ஆயிரத்து988), மேற்கு வங்காளம் (58 ஆயிரத்து 718), குஜராத் (55 ஆயிரத்து 822), தெலுங்கானா (54 ஆயிரத்து 059), ராஜஸ்தான் (35 ஆயிரத்து 909) உள்ளன.

பீகாரில் 39 ஆயிரத்து 176, அசாமில் 32 ஆயிரத்து228, ஹரியானாவில் 31 ஆயிரத்து 332, மத்தியப் பிரதேசத்தில் 27 ஆயிரத்து 800, ஒடிசாவில் 25 ஆயிரத்து 389, கேரளாவில் 19 ஆயிரத்து 025, ஜம்மு -காஷ்மீரில் 17 ஆயிரத்து 920, பஞ்சாப்பில் 13 ஆயிரத்து 218 பேருக்கு தொற்று உள்ளது.

ஜார்க்கண்டில் 8,275, பேருக்கும் சத்தீஷ்காரில் 7,450 பேருக்கும், உத்தரகண்டில் 6,104 பேருக்கும், கோவாவில் 4,861 பேருக்கும், திரிபுராவில் 3,900பேருக்கும், புதுச்சேரியில் 2,786பேருக்கும், மணிப்பூரில் 2,235 பேருக்கும், இமாசலப்பிரதேச த்தில் 2,176 பேருக்கும், நாகலாந்தில் 1,339 பேருக்கும்,லடாக்கில் 1,285 பேருக்கும், அருணாசலப்பிர தேசத்தில் 1,158 பேருக்கும், சண்டிகாரில் 887 பேருக்கும், தாதர்-நாகர் ஹவேலி, டாமன் - டையூவில் 914 பேருக்கும் , மேகாலயாவில் 702 பேருக்கும், சிக்கிமில் 545 பேருக்கும், மிசோரமில் 361 பேருக்கும், அந்தமான் நிகோபாரில் 324 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது.இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தொற்று குறித்து அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.ப்ரீ பிரிண்ட் களஞ்சியமான ‘மெட்ராக்ஸிவ்’ இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா முழுவதும் கொரோனா புள்ளிவிவர அறிக்கையில் ஏற்றத்தாழ்வு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் தகவல்படி  வெளிப்படையான மற்றும் அணுகக்கூடிய புள்ளிவிவர அறிக்கைகள் (மே 19-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை) பொது சுகாதார முயற்சிக்கு முக்கியமானது. பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் மோசமான புள்ளிவிவரங்களை கொண்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.“இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட கொரோனா தரவு அறிக்கையின் தரம் குறித்த விரிவான மதிப்பீட்டை நாங்கள் முன்வைத்துள்ளோம். எங்கள் முடிவுகள் இந்தியாவில் மாநில அரசுகள்செய்துள்ள கொரோனா தரவு அறிக்கையின் தரத்தில் வலுவான ஏற்றத்தாழ்வு இருப்பதை காட்டுகின்றன.

கொரோனா தரவு அறிக்கையின்படி கர்நாடகா 0.61 மதிப்பெண் (நன்று)பெற்றுள்ளது. கேரளா (0.52), ஒடிசா (0.51), புதுச்சேரி (0.51), தமிழ்நாடு (0.51) மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.  பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 0.0 (மோசம்) வரை வேறுபடுகின்றன, இதன் சராசரி மதிப்பு 0.26 ஆகும்” என்றும் கூறப்பட்டுள்ளது.பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகியவை தனிப்பட்டமுறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களைஅதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் தனியுரிமையை சமரசம் செய்துள்ளன.அசாம் மற்றும் குஜராத் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கையை மட்டுமே கொடுத்தன. அதே நேரத்தில் கேரளா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனாவின் போக்கையும் தெரிவித்திருந்தது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் கொரோனா அறிக்கையின் தரம் 0.26 புள்ளிகள் மட்டுமே என்றும் அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.