tamilnadu

img

தொழிலாளர் சட்டம் திருத்தப்பட்டால் நாடு கொந்தளிக்கும்

திருநெல்வேலி, ஜுலை 21- தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படு மானால் இந்தியா கொந்தளிக்கும்; தொழி லாளர்கள் பொங்கி எழுவார்கள் என சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் எச்சரிக்கை விடுத்தார்.   நெல்லையில் நடைபெற்று வரும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) 14-வது மாநில மாநட்டுக்கு தலைமை வகித்து சிஐடியு மாநில தலைவரும் சம்மேளனத்தின் தலைவருமான அ.சவுந்தரராசன் பேசியதாவது:  இந்திய ஜனநாயகம் இருள் சூழ்ந்த கால கட்டத்தில் உள்ளது. பாஜகவுக்கு கிடைத்திருக் கும் பெரும்பான்மை இந்திய தொழி லாளிகள், விவசாயிகள் உள்ளிட்ட பெரும் பான்மை மக்களுக்கு சோதனை. நமக்கு  ஏற்கனவே தெரியும், இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாக செயல்படு வார்கள்; பொதுத்துறைகளை விற்பார்கள் என்பது. நாம் இவற்றை தேர்தலின்போது வலு வாக பிரச்சாரம் செய்தோம். ஆனால் நமது தேர்தல் முறையால் 37 சதவிகிதம் வாக்கு களை பெற்ற பாஜக 303 இடங்களில் வெற்றிபெற முடிந்தது. உண்மையான மக்கள் பிரநி தித்துவம் என்பது விகிதாச்சார அடிப்படை யிலான தேர்தல் முறையால் மட்டுமே கிடைக்கும். இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கு 12 இடங்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்ளது. நமது தேர்தல் முறையாக இருந்தால் ஒரு இடத்தைக்கூட அக்கட்சி பெற்றிருக்காது.  தேர்தலில் பணத்தின் செல்வாக்கை குறைக்க தேர்தல் ஆணையமே வேட்பாளர் களுக்கு பணம் கொடுக்கும் வழிமுறையை ஆராயலாம். இல்லையென்றால் கார்ப்பரேட்டு களிடமிருந்து பணம் பெறுகிறவர்கள், அவர் களுக்கு கைப்பாவையாக செயல்படு கிறவர்கள் மட்டுமே வெற்றி பெறும் சூழலை ஏற்படுத்திவிடும். தற்போது நடந்த நாடாளு மன்ற தேர்தலில் பாஜக ரூ.27 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. 

தோழர் ஜர்னாதாஸ் பதிலடி
இரு தினங்களுக்கு முன்பு திரிபுராவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தோழர் ஜர்னாதாஸ், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்த கோரிக்கைகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். மத்திய அரசு தலையிட்டு மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துவதற்காக தில்லி யிலுள்ள அலுவலகம் சென்ற அவரை 2 மணி நேரம் காக்க வைத்து இரவு 7 மணிக்கு அவரை சந்தித்தார். அவரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இன்னமும் ஏன் இருக்கிறீர்கள்; பாஜகவுக்கு வந்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த ஜர்னாதாஸ், நான் உள்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கத்தான் வந்தேன்; பாஜக தலைவரை அல்ல. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் இருந்தால் கூட வகுப்புவாத த்துக்கு எதிராக போராடுவேன். இந்த பேச் செல்லாம் என்னிடம் வேண்டாம் என்று பதிலடி கொடுத்துள்ளார். நாடு முழுவதும் இது பெரும் செய்தியாக வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜகவினர் ஆயி ரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து  எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி யிருக்கிறார்கள். இது எல்லா மாநிலங்களி லும் நடந்து கொண்டிருக்கிறது. மாநிலங்களவை யில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. அதற்காக மாநிலங்களவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள். மாநிலங்களவை யில் பெரும்பான்மை கிடைத்துவிட்டால் அனைத்து சட்டங்களையும் திருத்த முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றுவார்கள். ஜனாதிபதி ஆட்சிமுறையை நோக்கி அவர்கள் செல்வார்கள். எதிர்ப்புகளை மறைக்க மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறார்கள். அது நீடிக்காது. 

பட்ஜெட் மோசடியும் பொதுத்துறைக்கு ஆபத்தும்

இப்போது உடனடியாக வந்திருக்கும் பிரச்சனை பொதுத்துறைகளை விற்பது. பட்ஜெட்டில் இவ்வளவு பணத்தை எங்கிருந்து திரட்டுவீர்கள் என்று நிர்மலா சீத்தாராமனிடம் கேட்டால் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு பொதுத்துறைகளை விற்போம் என்கிறார். பட்ஜெட்டை ஒட்டி வந்திருக்கும் பொருளாதார ஆய்வறிக்கை போன்ற அத்தனையும் இந்தியா ஏழரை சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறுகின்றன. ஆனால், அதில் உண்மை இல்லை. ஒரு பச்சை யான பொய்யை இந்த அரசு கூறி வருகிறது. மூன்றரை சதவிகிதமே வளர்ச்சி என நிதி  ஆயோக்கின் முன்னாள் தலைவர் அரவிந்த் சுப்ரமணியம் கூறி வருகிறார்.  பட்ஜெட்டின் புள்ளி விவரங்கள் அனைத்தும் மோசடி. வளர்ச்சி விகிதம் வேலைவாய்ப்பு குறித்தெல்லாம் பட்ஜெட்டில் தவறான புள்ளி விவரங்கள் இடம் பெற்றுள்ளன.  எந்தவித கூச்சமும் இல்லாமல் பெருமுத லாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் 5 லட்சம் கோடி, 6 லட்சம் கோடி என அள்ளி வீசுகிறார்கள். நாம் இத்தனை ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும் பிரம்மாண்டமான கேந்திரமான கனரக தொழிற்சாலைகள் அத்தனையையும் அதானியிடமும் அம்பானி யிடமும் ஒப்படைக்கப் போகிறார்கள்.  சேலம் உருக்காலை தமிழகத்தின் சிறந்த பொதுத்துறை நிறுவனம். அதில் உள்ள  நாலாயிரம் ஏக்கர் நிலம் ஏழை விவசாயிகளிட மிருந்து ஏக்கருக்கு நூறு நூத்தைம்பது ரூபாய் என்று வாங்கியதாகும். இந்த நிலங்கள் உட்பட ஆலையை முழுமையாக ஜிண்டாலுக்கும், அதானிக்கும் விற்போம்  என்கிறார்கள். இவ்வளவு பெரிய அக்கிரமம் வேறு எந்த மாநிலத்திலும் நடந்ததாக தெரிய வில்லை. இதையெல்லாம் எதிர்த்து வலுவான போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். வரக்கூடிய காலம் முழுவதும் நாம் போர்க் களத்திலேயே நிற்க வேண்டிய காலம். எல்லா வித தாக்குதல்களையும் வலுவாக  நாம் எதிர்கொள்வோம். 

அமெரிக்காவும் சீனாவும்

இன்று அமெரிக்கா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவை பாதித்துக் கொண்டிருக்கிறது. ஈரானிலிருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என தடை விதிக்கிறது. அதன்  மூலம் எண்ணெய் விலை மேலும் உயரும். மத்திய பட்ஜெட்டிலேயே ரூ.2 உயர்த்தப்பட்டி ருக்கிறது. டீசல் விலை உயர்வு உங்களது தொழிலோடு தொடர்புடையது. அதன் பாதிப்பு  உங்களுக்கு நன்றாக தெரியும்.  உலகம் முழுவதும் விவசாயிகளுக்கு மானி யம் வழங்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் கொடுக்க கூடாது என கட்டாயப்படுத்துகிறது அமெரிக்கா. 1990 ஆம் ஆண்டு உலகமய ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டு எல்லா நாடு களுக்கும் வருவேன் என்று கூறிய அமெரிக்கா  இன்று தனது நாட்டுக்கு சீனா வரக்கூடாது என்று கூறுகிறது.  உலக நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் இந்த நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும். இங்குள்ள தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டங்களை திருத்துமாறு கார்ப்பரேட்டுகள் கூறுகிறார்கள். பணிநிரந்தரம், பணிப்பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கு சட்ட உரிமை எல்லாம் எதற்கு என்கிறார்கள். நாங்கள் எச்சரிக்கிறோம்... நீங்கள் அதை யெல்லாம் செய்தால் தொழிலாளர்கள் அழிந்துவிடப்போவதில்லை. இந்த சட்டங்கள்  இருந்தால் இன்று இருக்கும் நிதானத்தோடு போராட்டங்கள் நடக்கும். சட்டங்கள் திருத்தப்படுமானால் இந்தியா கொந்தளிக்கும். தொழிலாளர்கள் பொங்கி எழுவார்கள்.  இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசினார்.