புதுச்சேரி, ஏப்.25- கடைகளை முழுமையாக மூடும் நிலையை உருவாக்க வேண்டாம் என்று பொதுமக்க ளுக்கு புதுவை முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இந்நிலையில் அரசின் செயல் பாட்டுக்கு களங்கம் விளை விக்க துணைநிலை ஆளுநர் முயற்சிக்கிறார். அதன் முதல் கட்டமாக நீதிமன்ற உத்தரவு களை மீறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வரு கிறார். காவல்துறையினர் மீது வசை பாடுவதும் குற்றச்சாட்டுகளை கூறுவதும் அவரது தொடர் கதை யாகி உள்ளது. காவல்துறையின ருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பு டி.ஜி.பி.க்கு உள்ளது என்று கூறி உள்ளேன்.
இதேபோல் கலால் துறை, வருவாய்துறை அதிகாரிகளும், கவர்னர் கிரண்படியின் சட்ட விரோத செயல்பாட்டினால் பாதிக் கப்பட்டு உள்ளனர். இதுதொடர் பாக நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி வருகிறோம். நாள்தோறும் பொது மக்கள் வெளியில் நடமாடுவது அதிக ரித்து வருகிறது. 3 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள். ஏதாவது காரணம் கூறி வெளி யில் நடமாடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பாக அமைந்து விடும். ஊரடங்கு விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் கடைகளை மூட சில நகரங்களில் உத்தரவிடப்பட்டுள் ளது. புதுவையில் தொடர்ந்து ஊரடங்கை மதிக்காமல் மக்கள் நடமாடினால் 2 நாட்கள் கடையை மூடிவிட்டு 3-வது நாள் மட்டும் கடையை திறக்கும் சூழ்நிலை ஏற்படும். மக்கள் அரசின் உத்தரவுகளை கடைபிடிக்காவிட்டால் இது போன்ற உத்தரவுகளை கண் டிப்பாக நடைமுறைப்படுத்து வோம். அதுபோன்ற நிலையை உருவாக்கதீர்கள். இவ்வாறு முதலமைச்சர் கூறி னார்.