tamilnadu

img

நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் நிகர நேரடி வரி வசூல் 31% வீழ்ச்சி.. மறைமுக வரி வசூலிலும் 11 சதவிகிதம் சரிவு....

புதுதில்லி:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலகட்டத் தில் நிகர நேரடி வரி வசூல் 31.1 சதவிகிதமும், மறைமுக வரி வசூல் 11 சதவிகிதம் வீழ்ச்சிஅடைந்துள்ளது.இதுகுறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர். மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில்ஒன்றை அளித்துள்ளார். அதில்அவர் கூறியிருப்பதாவது:

2029 - 20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில்நேரடி வரி வசூலானது ரூ.2லட்சத்து 79 ஆயிரம் கோடியாகஇருந்தது. இது நடப்பு 2020 - 21 நிதியாண்டின் அதே ஐந்து மாத காலத்தில் ரூ. 1 லட்சத்து 92 ஆயிரம் கோடியாக சரிவடைந்துள்ளது. இதேபோல நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில் நிகர மறைமுக வரி வசூலும்,கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 11 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. முந்தைய 2019 - 20 நிதியாண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில் ரூ. 3 லட்சத்து 86 ஆயிரம் கோடி அளவிற்கு மறைமுக வரி வசூலாகி இருந்தது. இது தற்போது, ரூ. 3 லட்சத்து 42 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 1 லட் சத்து 81 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், அதுவும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனா பொதுமுடக்கத்தால், நிறுவனங்கள் இன்னும் பழைய படிசெயல்பட ஆரம்பிக்கவில்லை. அத்துடன் வரி செலுத்துவோருக்கு வரி தாக்கல் செய்வதற்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 6 லட்சத்து90 ஆயிரத்து 500 கோடியாகஇருக்கும் என பட்ஜெட்டில்மதிப்பீடு செய்யப்பட்டிருந் தது. மறுமதிப்பீட்டில் இது ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து 327கோடியாக குறைக்கப்பட்டுள் ளது.2019 - 20 நிதியாண்டிலும் 5 லட்சத்து 98 ஆயிரத்து 825 கோடி அளவிற்கே ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது.இவ்வாறு அனுராக் தாக் குர் குறிப்பிட்டுள்ளார்.