பெங்களூரு:
மூத்த தலைவரும், நாட்டின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:காங்கிரஸ் கட்சியானது குழப்பம் மற்றும்நம்பிக்கையின்மை ஆகியவற்றில் சிக்கியிருந்த மோசமான காலம் தற்போது விலகியுள்ளது. இதற்கான அறிகுறிகள்தான், மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்திருப்பதாகும். ஹரியானாவில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றியதொகுதிகளை விட இரண்டு மடங்கு தொகுதிகளை காங்கிரஸ் தற்போதுகைப்பற்றியுள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தமுன்னேற்றம் காங்கிரஸ் தொண்டர்களிடையே நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்துடன் காங்கிரசின் சரிவும், கெட்ட காலமும் முடிவுக்கு வந்துவிட்டது. இவ்வாறு குர்ஷித் கூறியுள்ளார்.