பெங்களூரு:
“மத்திய அரசு அறிவித் துள்ள ரூ.20 லட்சம் கோடிநிதித் தொகுப்பு ஒரு பொய்மூட்டை” என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமானகுமாரசாமி விமர்சித்துள்ளார்.பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கொரோனாவால் மாநிலங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் மாநிலங் களுக்கு நிதி உதவி வழங்கவேண்டும் என்று 15-ஆவதுநிதிக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 20 லட் சம் கோடி நிதித் தொகுப்பில், மாநிலங்களுக்கு எந்த நிதியுதவியும் அறிவிக்கவில்லை. கடன் கொடுப்பதாக கூறுகிறார்கள். நிவாரணம் என் றால் கடன் கொடுப்பது அல்ல.மத்திய அரசு அறிவித்துள்ளஇந்த ரூ.20 லட்சம் கோடி தொகுப்பால், பொருளாதார வளர்ச்சி ஏற்படாது. 40 கோடிமக்கள் வறுமையில் உள்ளனர். அந்த தொகுப்பு ஏழை மக்களுக்கு உதவாது. தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்துவதாக கூறியுள்ளது. இதற் காக மத்திய அரசுக்கு ரூ.2,500கோடி மட்டுமே செலவாகும்.
மின் வினியோக நிறுவனங் களுக்கு ரூ.90 ஆயிரம் கோடிகொடுப்பதாக மத்திய அரசுகூறியுள்ளது. இதற்கு மாநிலஅரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதற்கும், மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை. மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி நிதி தொகுப்பு, ஒரு பொய் மூட்டை. வெறும்முட்டாள்தனமான அறிவிப்புகள். மக்களை திசை திருப்பவே இத்தகைய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இவ்வாறு குமாரசாமி சாடியுள்ளார்.