tamilnadu

img

இந்தித் திணிப்பால் பறிபோகும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு... ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு:
மத்திய ஆட்சியாளர்களின் இந்தித் திணிப்பால், இந்தி பேசாதமாநில மொழி இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவு பறிபோவதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமானகுமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் திமுக எம்.பி.,கனிமொழியிடம் ‘நீங்கள் இந்தியரா?’ என கேள்வி கேட்ட விவகாரம் தொடர்பாக, குமாரசாமி தனதுடுவிட்டர் பக்கத்தில் விரிவானகருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:

சகோதரி கனிமொழிக்கு நேர்ந்த அவமானத்துக்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன். இந்தி அரசியல்வாதிகள் தங்களது பாகுபாட்டின் மூலம் தென்னிந்திய அரசியல் தலைவர்களின்வாய்ப்புகளை எவ்வாறு பறித் தார்கள் என விவாதிக்க இது சரியான தருணமாகும்.இந்தி அரசியல், கருணாநிதி,காமராஜர் போன்ற தென்னிந்தியர்களை பிரதமராக விடாமல் தடுத்தது. இந்தத் தடைகளை மீறி, தேவகவுடா பிரதமர் ஆனபோதிலும், மொழியின் காரணமாக விமர்சிக்கப்பட்டு கேலி செய்யப்பட்டார்.
நான் இருமுறை மக்களவைஉறுப்பினராக இருந்த போது எனக்கும் இதுபோன்ற அனுபவங் கள் ஏற்பட்டன. ஆளும் வர்க்கம்தென்னிந்தியாவை புறக்கணிப் பதை கவனித்திருக்கிறேன். பொதுத்துறை வேலைகளுக்கான தேர்வையும் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத வேண்டியுள்ளது. மத்திய அரசின் பல தேர்வுகளை கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் எழுத வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பிராந் திய மொழி இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் தொடர்ந்து தடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.