tamilnadu

img

பெங்களூருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு... வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி கர்நாடக பாஜக அரசு அராஜகம்

பெங்களூரு:
பெங்களூருவில் 300 இஸ்லாமியக் குடும்பங்கள் வசித்து வந்த குடியிருப்புகளை, கர்நாடக மாநில பாஜக அரசு புல்டோசர் மூலம் இடித்து, அராஜகத்தில்ஈடுபட்டுள்ளது.இங்கு வசித்து வந்த இஸ்லாமியர்கள் இந்தியர்கள் அல்ல; அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் கிளப்பிவிட்ட புரளியை, உண்மை என்று எடுத்துக் கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளனர்.

பெங்களூருவின் வடக்கு பகுதியில் உள்ள அக்ரஹாரா பகுதியில் ஏராளமானஇஸ்லாமியக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களை, வங்கதேசத்திலிருந்து வந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அப்பகுதி பாஜக எம்எல்ஏஅர்விந்த் லிம்பாவளி, வாட்ஸ் ஆப்மற்றும் முகநூலில் வதந்தி கிளப்பியுள்ளார். பலரும் அந்த வதந்தியை உண்மையாக கருதி, வேகவேகமாக சமூகவலைத்தளங்களில் அதனைப் பரப்பியுள்ளனர்.எடியூரப்பா தலைமையிலான கர் நாடக மாநில பாஜக அரசும், இதை அப்படியே பிடித்துக் கொண்டது. முதலில், இஸ்லாமிய மக்கள் வசிக்கும் அக்ரஹாரா பகுதிக்கு வழங்கப்பட்டு வந்தமின்சாரம், குடிநீர் இணைப்பு ஆகியவற்றை, மாநகராட்சி அதிகாரிகள் மூலம்துண்டித்த எடியூரப்பா அரசு, தற்போது,300 குடும்பங்கள் வரை வசித்து வந்தநூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புக் களை இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளது.மேலும் இங்கு வசித்து வந்த இஸ்லாமியர்களை, ‘உடனடியாக கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்றும் காவல்துறை மூலம் உத்தரவிட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக இங்கு வசித்துவந்த இஸ்லாமிய மக்களை அதிர்ச்சியில்தள்ளியுள்ளது.

“நாங்கள் அனைவரும் கர்நாடக மக்கள். எங்களுக்கு வங்கதேசம் எங்கேஇருக்கிறது என்று கூட தெரியாது; நாங்கள் இந்தியர்கள் என்பதற்கு, ஆதார்,ரேசன் கார்டு, வாக்காளர் அடையாளஅட்டை என அனைத்து ஆவணங்களும்உள்ளன. ஆனால், மத அடையாளங் களை வைத்து, எங்களை வங்கதேசத் தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, வீடுகளை இடித்துள்ளனர். இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது” என்று பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் புலம்பி நிற் கின்றனர்.அக்ரஹாரா பகுதியில், சில வட இந்தியர்களும் இருக்கிறார்கள். அவர்கள்அசாமைச் சேர்ந்தவர்கள். அம்மாநிலஎன்ஆர்சி பட்டியலிலும் அவர்களின் பெயர்கள் இருக்கின்றன. அத்துடன் தமிழகத்தை சேர்ந்த தமிழ் இஸ்லாமியர் களும் வசித்து வருகின்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் என்பதற்காக இவர்கள் அனைவரையுமே வங்கதேசத்தவர் என்று பாஜகவினர் கதைகட்டி விட்டு, தற்போது வீடுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு சமூக செயற் பாட்டாளர்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாஜக எம்எல்ஏ லிம்பாவளியின் புகாரில் உண்மை இருக்கிறதா; இங்கு வசிப்பவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்தானா? என்பதை முறைப்படி விசாரணை எதுவும் செய்யாமல், கர்நாடக பாஜக அரசு எதேச்சதிகாரமான முறையில், வீடுகளை இடித்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாலும், இவ்வளவு அவசரமாக அவர்களின் குடியிருப்புகளை இடிக்க வேண்டிய தேவை என்ன?என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர்.குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது, அண்டை நாடுகளிலிருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு, இந்தியாவில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு நன்மை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது என்று மோடி அரசு கூறினாலும், உண்மையில் அது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். மேலும், இந்தச் சட்டம் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வந்தனர். பெங்களூரு சம்பவம் அதனை உண்மையாக்கி இருக்கிறது.