கவுகாத்தி:
அசாமில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிடச் சொல்லி மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பக்ரூதின் அலி அகமது மருத்துவக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ஜோதி காவ்ன் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பைக்கில் வந்த நான்கு பேர்,ஒரு மருந்துக் கடைக்கு வந்துஅதன் ஊழியர்களில் ஒருவரான ராகிபுல் ஹக்கை அடித்துள்ளனர். அத்துடன் அருகில் டீக்கடையில் இருந்த குர்பன்கான் மற்றும் புரான் அலி என்பவரை தவறான வார்த்தைகளில் கடுமையாக திட்டியுள்ளனர். எந்த காரணமும் இல்லாமல் அவர்களை அடித்துள்ளனர். ‘ஜெய் ஸ்ரீராம் என்றுகோஷமிடுமாறு மிரட்டி கட்டாயப்படுத்தியுள்ளனர்.அதற்கு மறுத்த நிலையில், இஸ்லாமிய இளைஞர்கள் 3 பேரையும் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக ஒருவர்தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.