india

img

விவசாயிகள் மீதான தாக்குதல் இரண்டாம் ‘ஜாலியன் வாலாபாக்’... ஹரியானா அரசு ஆட்சியில் தொடர உரிமையில்லை... சிவசேனா கடும் கண்டனம்....

மும்பை:
ஹரியானா விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் 2-ஆவது ‘ஜாலியன் வாலாபாக்’ சம்பவம் என்று சிவசேனாகடுமையாக சாடியுள்ளது.இதுகுறித்து சிவசேனா தனது ‘சாம்னா’ பத்திரிகை தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:அமிர்தசரசில் புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக்வளாகத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கும் போது, ஹரியானாவில் இரண்டாவது ஜாலியன் வாலாபாக் நடக்கிறது. அரசால் விதைக்கப்படும் இந்த கொடூரத்தின் விதைகள்நிச்சயம் கசப்பான பழங் களை கொடுக்கும். இது உறுதியானது. மனோகர் லால் கட்டார்அரசு, இனிமேலும் ஆட்சியில் இருப்பதற்கு உரிமை இல்லை. 

இந்த தடியடி சம்பவம் இந்திய விவசாயிகளை கிளர்ந்தெழச் செய்துள்ளது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு துளிச் சொட்டு ரத்தமும் உங்களை நிச்சயம் பழிவாங்கும். ஒன்றிய அரசின் அமைச்சர்ஒருவர் மகாராஷ்டிர முதல்வரை தாக்கிப் பேசுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்போது, இந்தமாநில அரசு சகிப்புத்தன்மையற்றது என கூறுகிறார்கள். அதேநேரத்தில், ஹரியானா முதல்வர் கட்டாருக்கு எதிராககோஷம் எழுப்பிய விவசாயிகள் தலையில் லத்தியால் சரமாரியாக தாக்கப்பட்டனர். இப்போது அந்த விமர்சகர்கள் அமைதியாகி விட்டார்கள்.

மகாராஷ்டிரத்தில், சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் அன்று இரவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார். ஆனால்தில்லிக்கு அருகில் உள்ள காஜிபூர் எல்லையில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக 3 வேளாண்சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், விவசாயத்தை தனியார்மயம் ஆக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடிஅவர்களை சென்று சந்திக்கவில்லை. கல்நெஞ்சம் படைத்த தாக மோடி அரசு உள்ளது.இவ்வாறு சிவசேனா சாடியுள்ளது.