districts

img

ராசிபுரம் வட்டாட்சியர் மீது தாக்குதல் வருவாய்த்துறையினர் பணியை புறக்கணித்து போராட்டம்

நாமக்கல், ஏப்.5- ராசிபுரத்தில் வட்டாட்சியரை தாக்கியவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்று வட்டார பகுதிக ளான ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை போன்ற பகுதிகளில், வருவாய்த்துறை அனுமதியின்றி இரவு நேரங் களில் மண் எடுத்துச் செல்லப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக ஒரு தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள், மற்றொரு தரப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கடந்த சனியன்று வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வட்டாட்சியருடன் ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், பணி பாதுகாப்பு வழங்க கோரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திங்களன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கத் தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஏ.ராணி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை  துறை ஊழியர்கள் மற்றும் அனைத்து கிராம உதவியாளர் கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.