அசாம் மாநிலத்தில் கடந்த 16 நாட்களில் கொரோனா தாக்குதல் மொத்த பாதிப்புகளில் 48 சதவீதம் பதிவு செய்துள்ளது.
மாநிலத்தின் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 76,875 ஆக உள்ளது. இதில் 47.62 சதவீத தொற்றுகள் கடந்த 16 நாட்களில் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 16 வரை மாநிலத்தில் கொடிய வைரஸுக்கு 36,606 தொற்றுகள் கண்டறியப்பட்டதாக அசாம் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 1,317 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.