தில்லி டி-20
வங்கதேச கிரிக்கெட் அணி டி-20, டெஸ்ட் என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது.
3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் ஞாயிறன்று தில்லியில் நடைபெற்றது. தில்லி மாநகரில் நிலவும் காற்று மாசு பிரச்சனை காரணமாகத் தொடக்கம் முதலே மந்தமாக நகர்ந்த இந்த ஆட்டத்தில், வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. கத்துக்குட்டி அணிகளின் வரிசையிலிருந்த வங்கதேச அணி தனது கடின உழைப்பால் வளர்ந்து முன்னாள் சாம்பியனான இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் புரட்டி எடுத்திருப்பது கிரிக்கெட் உலகில் விமர்சன பொருளாக மாறியுள்ளது.
கடந்த மாதம் பலமான தென் ஆப்பிரிக்க அணியை எளிதாக வீழ்த்திய இந்திய அணி வங்கதேச அணியிடம் ஏன் தோற்றது என்பதை 10 காரணங்கள் மூலம் விரிவாகக் காண்போம்:
இந்திய அணி பொதுவாக ஒரு தொடரைக் கைப்பற்றி விட்டால் அதற்கு அடுத்து வரும் தொடரை அசால்ட்டாக எடுத்துக் கொள்வது. தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய தைரியத்தில் வங்கதேசத்திடம் மண்ணைக் கவ்வியுள்ளது.
சொந்த மண்ணில் நாம் தான் ராஜா. நம்மை எவரும் சாய்க்க முடியாது என்ற நினைப்புடன் விளையாடிச் சொதப்பியது.
ஆடும் லெவன் தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகம் அடிக்கடி சொதப்புவது.
சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் ஷுவம் துபே, க்ருனால் பாண்ட யாவை களமிறக்கி பேட்டிங்கில் சொதப்பியது. ஷுவம் துபே, க்ருனால் பாண்டயா பந்துவீச்சிலும் சோபிக்க வில்லை.
அதிரடிக்கு சம்பந்தமில்லாத ஷிகர் தவானை களமிறக்கி யது. தில்லி ஆட்டத்தில் ஒருநாள் தொடரைப் போன்று ரன் சேர்த்தார்.
தில்லி ஆடுகளம் மந்தமான தன்மை உடையது என்பது தெரிந்தும் ஆமை போல் ரன்களை குவித்தது.
திடமான பேட்டிங் இல்லாமல் சம்பிரதாயமாக விளை யாடும் ரிஷப் பண்டை நெடுவரிசையில் களமிறக்கியது. ஒற்றை கையில் டென்னிஸ் விளையாடுவது போன்ற ஆட்டம் ஐபிஎல் போட்டிக்குத் தான் சாதகமாக இருக்குமே தவிர சர்வதேச போட்டிக்கு உதவாது என்பதைத் தேர்வுக்குழு அறியாமலிருந்தது.
டிஆர்எஸ் ரிவியூ முறையில் ரோஹித் சர்மா சொதப்பியது.
ரோஹித் சர்மாவின் கள வியூக சொதப்பல் மற்றும் வங்கதேச அணியின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க போதியளவு வியூகம் வகுக்காதது.
கலீல் அகமதுவிற்குக் குறுக்கே செல்லும் கோணத்தில் பந்துவீசத் தெரியாது என்பது இந்திய அணி நிர்வாகத்திற்குத் தெரிந்தும் அவரை வங்கதேச தொடரில் களமிறக்கி ரன்களை வாரி வழங்கவிட்டது.
மேற்கூறிய கருத்துக்கள் எல்லாம் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதுபோக கடும் காற்று மாசு பிரச்சனைக்கு நடுவே நடந்தத் தில்லி டி-20 போட்டியின் போது 2 வீரர்கள் வாந்தி எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மை என்றால் ஐசிசி விசாரணையில் குதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.