tamilnadu

img

அக்.14, 15ல் அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

பொதுமக்கள் பார்வையிடலாம்: பள்ளிக் கல்வித்துறை

சென்னை,அக்.12 மத்திய அரசின் என்சிஇஆர்டி அறி வுறுத்தலின்படி தமிழகத்தில் அரசு  மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் அக்டோபர் 14, 15 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் கண்கா ட்சியை பொதுமக்கள் பார்வையி டலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி  இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:  தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும்  பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒரு ங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் ஆகியவை சார்பில் 47-ஆவது ஜவ ஹர்லால் நேரு அறிவியல், கணித, சுற்றுப்புறக் கண்காட்சி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் வரும் அக்டோ பர் 14, 15-ஆம் தேதிகளில் நடத்தப்பட வுள்ளன. அதேவேளையில், அக்டோபர் 15ஆம் தேதி  ஏபிஜெ அப்துல்கலாம் பிறந்த நாள் விழா வும் (இளைஞர் எழுச்சி நாள்) அனை த்துப் பள்ளிகளிலும் கொண்டாடப்பட வுள்ளது.

இந்த அறிவியல் கண்காட்சி பள்ளி களில் உள்ள அறிவியல் ஆசிரி யர்கள், மாணவர்கள், அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக்க ழகப் பேராசிரியர்கள் ஆகியோரின் வழி காட்டுதலோடு சிறப்பாக நடத்தப்பட வுள்ளது. இவற்றை பள்ளிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், பெற்றோர்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்தக் கண்காட்சியில் பொது மக்கள் பங்கேற்று மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அறி வியல் கண்காட்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. வரு வாய் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்குத் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.