மதுாந்தகம், மார்ச் 13- அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பாதிரி நடு நிலைப் பள்ளியில் அறிவியல் கலைக் கண்காட்சி ஆசிரியர் ந.மாதவன் தலைமை யில் நடைபெற்றது. ஆசிரியர் பெ,கி.ஜெய்சங்கர் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர் கோ. கிருஷ்ணன், எழுத்தாளர் க..மருதன், வட்டா ரக் கல்வி அலுவலர் எ,பச்சையப்பன் ஆகி யோர் கண்காட்சி அறைகளைத் திறந்து வைத்தனர். கண்காட்சியில் பாம்பன் பாலம் இயங்கும் விதம், நீர்மூழ்கி கப்பல், பளுதூக்கி இயங்கும் விதம், ஜெசிபி கருவி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. இதில் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் செ.ஜோதிலட்சுமி ஆசிரியர் பயிற்றுநர் ப.ஜெயந்தி. தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் கெ.முனுசாமி, ச.தீனதயாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசி ரியை பா.விஜயலட்சுமி நன்றி கூறினார். நிகழ்வுகளை ஆசிரியர்கள் கு.தீனதயாளன். எம்.பாரிசா, லதா, செல்வி ஆகியோர் ஒருங்கி ணைத்தனர்.