tamilnadu

தொழிலாளியை தாக்கிய ஜெயங்கொண்டம் நகராட்சி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரியலூர், பிப்.20- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் பேரூராட்சியாக இருந்த போது கடந்த 1996-ல் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் பகுதி நேர மின் பணி உதவியாளராக வேலை க்கு சேர்ந்தார். பின்பு ஜெயங்கொண் டம் நகராட்சியாக மாற்றம் செய்யப் பட்டது. மாற்றம் செய்யப்பட்ட நகராட்சி யில் 2003 ஆம் ஆண்டு நிரந்தர பணி யாளராக, அவருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் தன் பணியை செய்து கொண்டிருக்கி றார்.  தற்போது இங்கு மேலாளராகப் பணி புரியும் அரங்கபார்த்திபன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயங் கொண்டத்தில் நகராட்சி ஆணையர் இல்லாத காரணத்தால் ஆணையராக வும் மேலாளராகவும் பணி செய்து வந்தார். இச்சூழலில் கடந்த ஆண்டு பதிவறை எழுத்தராக பணியாற்றி வந்த லட்சுமி என்ற பெண்ணை சித்ரவதை செய்ததில், அப்பெண் தற்கொலைக்கு முயன்றார். பின்பு அவர் பணிமாறுதல் பெற்று விருத்தாச்சலம் நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று சிவானந்தம், சம்பத், சின்னப்பன், அருண்குமார் ஆகியோரை அனுப்பி ஆண்டின் நிதி அறிக்கையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால் வரி பாக்கி உள்ள அனைத்து கடைகளிலும் வரிவசூல் செய்து வருமாறு மேலாளர் அரங்கபார்த்திபன் கட்டளையிட்டார். அத்துடன் அரசாணை படிவம் ஒன்றை சிவானந்தம் வழங்கினார். அந்த கோப் பில் இருக்கும் தகவல் கணக்கு முழு மையாக புரியவில்லை. எனவே இதற்கு விளக்கம் அளிக்குமாறு மேலாளரிடம் சிவானந்தம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மேலாளர் அரங்கபர்த்திபன், ‘மற்றவரெல்லாம் அறிக்கையை பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். உனக்கு மட்டும் என்ன அதிக பிரசங்கி என தகாத வார்த்தைகளால் திட்டி சிவானந்தத்தை தாக்கியுள்ளார். இதில் அவரது வலது கால் மூட்டில் அடிபட்டு உள்ளது. இடது காது பாதிப்படைந்துள்ளது.  இடதுபுற கன்னத்தில், கையில், காலில் காயம் என பல்வேறு இடங்களில் காயத்துடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிவானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சூழலில் செவ்வாயன்று மாலை சிவானந்தம் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பகுதிநேர வேலை நீக்கம் ஆணையை மருத்துவமனையிலிருந்து சிவானந்தத்திடம் இடம் வழங்க வந்தனர். இதை வாங்க மறுத்த சிவா னந்ததத்தின் இல்லத்துக்குச் சென்று, வீட்டின் சுவற்றில் பணியிடை நீக்க ஆணையை ஒட்டிவிட்டு, அதனை புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.  காயமடைந்த சிவானந்தம் மோச மான நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மேலாள ரும் ஆணையரும், சென்னையில் போர்டு மீட்டிங் உள்ளதாக கூறிவிட்டு, செவ்வாயன்று மாலையே சென்று விட்டனர்.  பாதிக்கப்பட்ட சிவானந்தத்திற்கு உரிய நடவடிக்கை எடுத்து அவரது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதுடன் கொடூரமாக செயல்பட்ட ஜெயங் கொண்டம் நகராட்சி ஆணையர் அரங்க பார்த்திபன் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் எதிர்பார்க்கின்ற னர்.